வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சாதாரண தோசை மற்றும் முட்டை தோசை இவற்றில் எவை சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
தென்னிந்திய மக்களின் பெரும்பாலான காலை உணவு இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று தான் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் தோசை, இட்லி சாப்பிடுவது நல்லதல்ல என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் தோசை சாப்பிடும் போது அதில் ஒருமுட்டையை உடைத்து ஊற்றி முட்டை தோசையாக சாப்பிட்டால் மிகவும் சிறந்தது என மருத்துவர் கூறியுள்ளார்.
மாவுடன் முட்டையை சேர்த்து முட்டை தோசையாக சாப்பிடுவது சர்க்கரையை அதிகரிக்கும் தன்மையைக் குறைக்குமாம்.

என்னென்ன நன்மைகள் உள்ளது?
முட்டை என்பது கிளைசீமிக் லோடு இல்லாத ஒரு பொருள். இவற்றினை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கவே அதிகரிக்காதாம்.
மேலும் அரிசி மாவுடன் முட்டை கலந்து ஊற்றும் போது சர்க்கரையின் உறிஞ்சும் தன்மையும் குறைவதாக கூறப்படுகின்றது.

முட்டை கொழுப்புச்சத்து நிறைந்தது என்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், தேவையற்ற தின்பண்டங்களை தவிர்க்கவும் முடியும்.
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் வீதம் சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முட்டையை தோசை மாவுடன், பிரட் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிப்பது குறையுமாம். அவ்வாறு பிரட், மாவு இல்லையெனில் 2 முட்டையை வேக வைத்து, அத்துடன் ஏதாவது ஒரு பழத்தினை சேர்த்து சாப்பிட்டால் காலை நேரத்திற்கு சிறந்த உணவாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |