வீட்டில் சிக்கன் இருக்கா? மணமணக்கும் வெள்ளை சிக்கன் குருமா இப்படி செய்து பாருங்க
விட்டில் சிக்கன் இருந்தால் இப்படி ஒருமுறை வெள்ளை குருமா செய்து பாருங்க. ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா என எல்லாவற்றுக்கும் சூப்பர் சைடு டிஷ் இது.

சிக்கனில் பல டிஷ் செய்யலாம். அதிலும் வெள்ளை சிக்கன் குருமா செய்தால் எல்லா உணவுகளுககும் இரு சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். மென்மையாக வெந்த சிக்கன், தேங்காய் விழுது, நறுமண மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படும் இந்தக் குருமா, இடியாப்பம், ஆப்பம், பரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட பல உணவுகளுடன் சுவையாகப் பொருந்துகிறது. ஹாட்டலில் செய்து சாப்பிடுவது போல வெள்ளை சிக்கள் குருமா செய்முறையை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1கிபெரிய வெங்காயம் – 4பச்சை மிளகாய் – 14இஞ்சி-30gகரம் மசாலா – 5g (whole spices )சோம்பு – 3 டீஸ்பூன்பட்டை – 1 துண்டுகிராம்பு – 6ஏலக்காய் – 6பிரியாணி இலை – 1தேங்காய் துருவல் – 1கப்முந்திரி – 50gகசகசா – 4 டீஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவு.

சிக்கன் குருமா செய்ய முந்திரி மற்றும் கசகசாவை 15 நிமிடம் ஊறவைத்து, தேங்காய் மற்றும் மற்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் சிக்கனைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். சிக்கன் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மூடி வைத்து 8–10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
இறுதியாக கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். இந்த மணமார்ந்த சிக்கன் குருமா இடியாப்பம், ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, நெய் சாதம், ஜீரா ரைஸ், வெஜிடபிள் புலாவ் மற்றும் பிரியாணியுடன் சுவையாக பரிமாறலாம்.