தயிரை சூடு பண்ணி சாப்பிடுவது ஆபத்தா? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது தயிர் இல்லாமல் முழுமையடையாது.
விசேஷத்திற்கு செய்யப்படும் உணவுகளில் கண்டிப்பாக சுவைக்காக தயிர் சேர்ப்பார்கள்.
தயிரின் சுவைக்காகவும் அதிலிருக்கும் கிரீமி அமைப்புக்காகவும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் மருத்துவர்களின் ஆலோசனை பிரகாரம் தயிரை உணவில் போட்டு சமைக்கவோ, தயிரை சூடாக்கவோ எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லை.
Image- netmeds
மேலும் தயிரில் இருக்கும்கால்சியம், ப்ரோபயாடிக்குகள் ஆகிய ஊட்டசத்துக்கள் மனித உடலுக்கு நன்மை பயக்கும்.
அந்த வகையில் தயிரை சூடாக்கி சாப்பிடும் பொழுது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சூடேற்றினால் என்ன நடக்கும்?
1. தயிரை சமைப்பது அல்லது சூடாக்குவதினால் அதிலுள்ள புரதங்கள் சிதைவடைவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் இப்படி சமைக்கும் பொழுது ஊட்டச்சத்து மதிப்பு, அமைப்பு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
Image - Getty Images/Thinkstock
2. தயிரில் இயற்கையாக ஈரப்பதம் காணப்படும். இதனை நாம் சமைக்கும் பொழுது தண்ணீர்த்தன்மை இல்லாமல் போகின்றது. இப்படியான நிலையில் தயிரின் சுவை மாறுகின்றது.
3. உணவை சூடேற்றுவதால் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒரு பாதுகாப்பு முறையாக பார்க்கப்படுகின்றது.
4. பச்சையாக தயிரை சாப்பிடும் பொழுது இருக்கும் சுவை. அதனை சமைத்த பின்னர் நிச்சயமாக இருக்காது.
சமைக்காமல் சாப்பிடுவதால் என்ன பலன்?
1. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி நல்ல கொலஸ்ரோலை உடலுக்கு கொடுக்கின்றது.
2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தயிர் உதவியாக இருக்கின்றது.
3. சமநிலையான pH அளவு யோனியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தயிர் உதவியாக இருக்கின்றது. யோனியில் எரிவது போன்ற உணர்வை இந்த தயிர் கட்டுபடுத்துகின்றது.
4. தயிரில் புரோட்டீன் அதிகமாக உள்ளது, இது பச்சையாக சாப்பிடும் பொழுது முழுமையாக உடலுக்கு கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |