வெதுவெதுப்பான சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
பொதுவாவே நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பல மசாலா பொருட்களில் ஏறாளமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அப்படி உடல் எடை அதிகரிப்பு தொடக்கம் மலச்சிக்கல் வரையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம்.
அது அகத்தை சீர் செய்வதால் தான் இதற்கு சீரகம் என்று பெயர் வந்துள்ளது. சமையலில் சீரகத்தை பயன்படுத்துவதை காட்டிலும் வெதுவெதுப்பான தண்ணீரில் இதனை சேர்த்து பயன்படுத்துவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.
அந்த வகையில் அதிகாலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரக தண்ணீரின் நன்மைகள்
தினசரி காலையில் வெறும் வயிற்றில் சீராக தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பு வலுவாகுவதுடன் வயிற்று வலி, வீக்கம், வாயு, அஜீரணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
சீரக தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வெதுவெதுப்பான சீரக தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும்.
சீரகத்தில் செறிந்து காணப்படும் ஃபென்சோன் உள்ளிட்ட மூலப்பொருள்கள், அதிகப்படியான கலோரிகளை எரிக்க துணைப்புரிவதால் வெகுவாக உடல் எடையை குறைக்க முடியும்.
சீரக தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் அதிகமாக இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு மண்டத்தை வலுவாக்க உதவுகின்றது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தினசரி வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வந்தால் விரைவில் இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
அதில் அதிகளவில் ஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது.
தினசரி சீரக தண்ணீர் குடிப்பது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மலச்சிக்கலுக்கும் விரைவில் தீர்வு கொடுக்கின்றது.
சீரக தண்ணீரில் அயன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியையும் தூண்டுகின்றது. தினசரி தொடர்ச்சியாக சீரக தண்ணீரை பருகுவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |