உங்க வீட்டு குழந்தைக்கு அதிகமாக கோபம் வருதா? இனி நாள் கடத்தாமல் இத பண்ணுங்க
பொதுவாக உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அதிகமாக கோபம் வந்தால் அதற்கு பெற்றோர்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
காலப்போக்கில் சரியாகி விடும் என்று நினைத்தால் அது அதிகமாகி விடும். குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த போராடுவார்கள்.
அதில் ஒன்று தான் கோபத்தை கட்டுப்படுத்தல். முக்கியமான குழந்தைகளின் உணர்வுகளை கட்டுபடுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தான் வழிப்படுத்த வேண்டும்.
என்ன பிரச்சினை வந்தாலும் கோபம் கொள்ளாமல் பிரச்சினையை சமாளிக்க கற்றுக் கொடுப்பது அவசியம்.
அந்த வகையில் குழந்தைகளின் மனநிலையை சரிப்படுத்த வழிமுறைகளை தொடர்ந்து கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
குழந்தையின் கோபத்தை கட்டுபடுத்த டிப்ஸ்
1. நியமிக்கப்பட்ட பாதுகாப்பான இடத்தில் அமைதியாக குழந்தையை அமர வைக்க முயற்சிக்கவும். அவர்களின் அறையில் இந்த பயிற்சியை மேற்கொள்ள வைப்பது சிறந்தது. அவர்களை கஷ்டப்படுத்தாமல் பிடித்த பொருட்களை வைத்து அமைதியாக அமர வைத்து விளையாட வைக்கவும்.
2. பிள்ளை கோபமாக இருக்கும் போது அவர்களை பாராட்டுங்கள். அதாவது நேர்மறையான வலுவூட்டல் ஆரோக்கியமான சமாளிக்கும் உத்திகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. நல்ல நடத்தைக்கு வெகுமதி அளிப்பது கோபத்தை திறம்பட இல்லாமலாக்கலாம்.
3. பிள்ளைக்கு கோபத்தை கட்டுபடுத்தி அதனை சமாளிக்க கற்றுக் கொடுங்கள். அவர்களின் விவாத சென்றுக் கொண்டிருக்கும் போது விலகிச் செல்வது, பேசுவது அல்லது சமரசத்தைக் கண்டறிவது ஆகியவை கூறலாம்.
4. கோபமாக இருக்கும் போது அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய நடத்தைகள், விதிமுறைகள் பற்றி சொல்லிக் கொடுக்கவும். விதிகளை மீறுவதால் ஏற்படும் தொடர்ச்சியான விளைவுகளை அவர்களுக்கு காட்ட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |