எடப்பாடி வசிக்கும் வார்டையே கைப்பற்றிய திமுக... பேரதிர்ச்சியில் அதிமுக LIVE VIDEO
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது.
அதிமுக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் இபிஎஸ், ஒபிஎஸ், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் கோட்டை என கருதப்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடி முக்கிய தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டையும் சேர்த்து திமுக கைப்பற்றியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டில் வசிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இங்கே அதிமுக தோல்வியடைந்துள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்காதது, நகைக்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசில் குறைபாடு, பாஜகவை விட்டு பிரிந்ததால் கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் என பல்வேறு சாதகமான சூழ்நிலை அதிமுக-விற்கு இருந்தும் வெற்றி பெறாமல் தவித்து வருகின்றது.
மேலும் திமுக சார்பில் வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
