எக்ஸிமா என்னும் தோல் அழற்சி நோய்.... இதன் அறிகுறிகள் என்ன?
எக்ஸிமா மற்றும் ஒவ்வாமை தோல் அழற்சி குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எக்ஸிமா
ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு, உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சனையாகும்.
பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், தோலில் அரிப்பு, சிவந்து போதல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் செதிலாக உரிதல் ஆகியவை அடங்கும்.
எக்ஸிமாவுக்கான சிகிச்சை தேர்வுகளும், அதே போல் நோய் முன்கணிப்பும், எக்ஸிமாவின் வகை மற்றும் ஒரு நபரின் வயதைப் பொறுத்து வேறுபடுகின்றன.
எக்ஸிமா என்பது, தோலில் சொரசொரப்பான, சிவந்த திட்டுக்கள் மற்றும் அரிப்பு ஏற்படுத்தும் கொப்புளங்கள் ஏற்படும் ஒரு தோல் பிரிச்சினையாகும். சில நேரங்களில் தீவிரமான அரிப்பு மற்றும் சொறிதல், இரத்தம் வழிதலை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினை எந்த வயதிலும், உடலின் எந்த ஒரு பகுதியிலும் பாதிக்கக் கூடும். எக்ஸிமா என்ற வார்த்தை கொதித்து வெளியேற எனப் பொருள்படும் கிரேக்க வார்த்தையான "எக்ஸீமா என்பதில் இருந்து வந்துள்ளது.
அறிகுறிகள் என்ன?
எக்ஸிமாவில் பலவிதமான வடிவங்கள் இருக்கின்றன. அவற்றில் சில சுற்றுச்சூழல் சார்ந்த காரணங்களால் அடையாளப்படுத்தப்படும் வேளையில், மற்றவை மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன.
அனைத்து வகை எக்ஸிமாக்களின் மருத்துவ அறிகுறிகளும் மற்றும் குறிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன மற்றும் சொறியின் கால அளவைப் பொறுத்து தீவிரமானது அல்லது நாள்பட்டது என வேறுபடுகின்றன.
ஒவ்வாமை எக்ஸிமா முகம் மற்றும் உடல்பகுதியோடு தொடர்புடையதாக இருக்கிறது. குழந்தை, பாதிக்கப்பட்ட பகுதிகளை சொறிவதால், தோல் செதில் செதிலாக மற்றும் சிகப்பாக மாறுகிறது.
மேலும் சருமம் வறண்டும், கன்னங்கள் முக்கியமாக பாதிக்கப்படுகின்றது. ஆனால் டயாப்பர் அணியும் பகுதியில் பாதிக்கப்படுவதில்லை.
குழந்தைப்பருவத்தில், சொறிகள் முழங்கால்களின் பின்புறம், முழங்கைகளின் முன்புறம், மணிக்கட்டுகள் மற்றும் கணுக்கால்களில் தோன்றுகின்றன. சில நேரங்களில், ஒவ்வாமை எக்ஸிமா பிறப்புறுப்பு பகுதிகளையும் பாதிக்கக் கூடும்.
வயது வந்தவர்களுக்கு, ஒரு பரவலான வடிவத்தில், வறண்ட, செதில்செதிலான தோல் போன்று, கைகள், கண் இமைகள் மற்றும் மார்புப்புக்காம்புகளில் ஏற்படுகிறது.
ஊறல் எக்ஸிமா ஒரு சிறிய தோல் துகள்கள் போன்று உச்சந்தலை, முகம் மற்றும் உடலின் மேற்பகுதியில் தோன்றுகிறது.
குழந்தைகளுக்கு, இது, அக்குளில் இருந்து இடுப்புப் பகுதி வரை பரவுவதோடு, தொட்டில் தொப்பி (உச்சந்தலையில் பிசுக்கான செதில் உரிதல்) ஏற்படக் காரணமாகிறது.
சொறியின் இந்த பட்டைகள், தோற்றத்தில் இளம்சிவப்பு நிறத்திலும், சாதாரணமாக குறைந்த அரிப்புடையதாகவும் இருக்கிறது. வயது வந்தவர்களிடம், பொதுவாகக் கண் இமை அழற்சி காணப்படுகிறது. எக்ஸிமா பொதுவாக குளிர் காலத்தில் தோன்றுகின்றன.
தட்டு வடிவ எக்ஸிமா நீர் வடியும் தீவிர வகை அல்லது வறண்ட வகையாகத் தோன்றுகிறது. இரண்டு வடிவங்களும் வழக்கமாக உடல்பகுதியில் தோன்றுகின்றன.
தட்டு வடிவ எக்ஸிமாவில், தனித்த வட்ட வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் சிகப்பு நிறமான காயம் காணப்படுகிறது. இந்தக் காயங்கள் வலிமிகுந்தவை.
இந்தக் காயம் சுடர் சிகப்பு நிறத்தில் திட்டுகளை உருவாக்கும் கொப்புளங்கள் வடிவில் தோன்றுகிறது. மேலும், தொடர்புடைய பகுதியில், செதில் செதிலாக ஏற்படுத்துகிறது. பின்னர் அந்தப் பகுதி வறண்டு, தோலில் விரிசல்கள் உண்டாகின்றன.
ஒவ்வாமை தொடர்பு எக்ஸிமா ஒவ்வாமைப் பொருட்களைத் தொடும் பகுதிகளில் காணப்படுகிறது. இருந்தாலும், முறையான கவனம் எடுக்கப்படவில்லை எனில், இது மற்ற பகுதிகளுக்கும் பரவக் கூடும்.
காயம், ஒவ்வாமைப் பொருளை ஒரு சில நாட்களுக்கு, அந்த இடத்தில் இருந்து தள்ளி வைப்பதன் மூலம் சரியாகிறது. தோல், சிவப்பாக, அரிப்போடு, வீக்கமாக அல்லது வறண்டு மற்றும் சமனற்று காணப்படுகிறது.
நிக்கல் (நகைகளில்) போன்ற ஒவ்வாமை பொருட்களோடு தொடர்பு ஏற்படுவதால் , பொதுவாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில், வெளிக்காதுகள் மற்றும் மணிக்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
அஸ்டியாடோடிக் எக்ஸிமா என்பது சிவந்து காணப்படுவதுடன், பின்னணியில் பிசுபிசுப்பான சிற்றலைகள் போன்று காணப்படும். இது, ஒரு வலைப்பி ன்னல் போன்று தோன்றக் கூடிய , சாய்சதுர வடிவ திட்டுக்களில் குறுக்கே சிகப்பு நிற பட்டைகள் செல்வது போல் தோன்றுகிறது. மிகவும் தீவிரமான நிலைகளில், வீக்கம் மற்றும் கொப்புளங்களும் காணப்படும்.
தேக்க நிலை எக்ஸிமா இரத்த ஓட்ட பற்றாக்குறையால் ஏற்படுவதால் இரத்த ஓட்ட தடை எக்ஸிமா எனவும் அறியப்படுகிறது. இவை, தடிப்புகள், கொப்புளங்கள், கருமையான தோல், கால்களில் நிறம் மாறிய தடித்த தோல், வறண்ட தோல், புண்கள் காணப்படும். காயங்கள் மிகக் கடுமையான வலியுடையதாக மற்றும் அரிப்புடையதாகவும் இருக்கும்.
பூஞ்சை பன்முக எக்ஸிமா பெரும்பாலும் கழுத்தின் பின்புறம், கால்களின் கீழ் பகுதி மற்றும் பிறப்புறுப்பு மற்றும் பின்புற பகுதிகளில் தோன்றுகிறது.
இது, ஒரு ஒற்றை படிவாக, எல்லை வரையறுக்கப்பட்ட நேர்கோடு வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் தோன்றுகிறது. இது கடுமையான அரிப்பை ஏற்படுத்துகிறது.
இது, வறண்ட சருமம் மற்றும் அரிப்பின் காரணமாக சிராய்ப்புகளுடன் கூடிய நிறமுள்ள காயங்களைக் கொண்டிருக்கிறது.
போம்ஃபோலிக்ஸ் உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் பாதிப்பதுடன், மீண்டும் மீண்டும் வரக்கூடிய கொப்புளங்கள் மற்றும் குமிழிகளாக காணப்படுகின்றது.
கொப்புளங்கள் வெடிக்கும் போது, அடிக்கடி வலிக்கக் கூடிய விரிசல்களோடு ஒரு வறண்ட, சிவந்த சருமத்தை உண்டாக்குகின்றன.
எக்ஸிமா சிகிச்சை என்ன?
எக்ஸிமா அதன் காரணத்தை அறிய முடியாத தன்மையினால் அதனைக் குணப்படுத்த முடியாது. அடிப்படை மருத்துவம் அறிகுறிகளைக் குறைக்க மற்றும் எக்ஸிமா திட்டுக்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பது ஆகும்.
மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள உறுதியான பொதுவான நடவடிக்கைகள்:
விளக்குதல், மனநிம்மதியளித்தல் மற்றும் ஊக்குவித்தல்.
எரிச்சலூட்டும் பொருட்களின் தொடர்பைத் தவிர்த்தல்.
கொழுப்பு நிறைந்த களிம்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல்.
கார்டிகோஸ்டெராய்டு க்ரீம்கள் மற்றும் களிம்புகளின் பொருத்தமான பயன்பாடு.
இவை தவிர பல்வேறு வகை எக்ஸிமாவுக்கு குறிப்பிட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வாமை எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாய்ச்சரைசர்களின் தொடர்ந்த பயன்பாடு, கார்டிகோஸ்டெராய்டுகளை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்துதல், ஈரமான துணி மற்றும் சில மருந்துகளை வைத்து கட்டு கட்டுதல், நோய்த்தொற்று உள்ள காயங்களாக இருந்தால், ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை கிருமி நாசினி மருந்துகள்
ஊறல் எக்ஸிமா என்றால் கேட்டோகோனசோல் ஷாம்பு மற்றும் க்ரீம்கள் போன்ற பொருட்கள், சிகிச்சையின் அடிப்படையில் இருந்தே, தேவைப்பட்டால் மிதமான கார்டிகோஸ்டெராய்டு கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் சிகிச்சை மறுபடி கொடுக்கப்படலாம்.
எரிச்சலூட்டும் பொருள் மூலமாக வரும் எக்ஸிமா என்றால் குறித்த பொருட்களின் மூலம் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் தவிர்த்தல். தேவைப்பட்டால், அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்தல்.
அஸ்டியோடாடிக் எக்ஸிமா என்றால் மாயிச்சரைஸர்களைப் பயன்படுத்துவது மற்றும் குளிக்கும் அளவுகளைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் வறண்ட சருமத்தைத் தவிர்த்தல். மேலும், அறிகுறிகளைக் குறைக்க மேற்பூச்சு கார்டிகோஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படலாம்.
பூஞ்சை பன்முக எக்ஸிமாவிற்கு மேற்பூச்சு ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொரு 4-6 வாரங்களுக்கும் ஸ்டெராய்டு ஊசிகள் தேவை, மாய்ச்சரைஸர்கள் மற்றும் குளிரூட்டும் களிம்புகள், ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
போம்ஃபோலிக்ஸ் எக்ஸிமாவிற்கு பொட்டாசியம் பர்மாங்கனேட் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈரமான துணியால் கட்டுதல், முக்கியமாக, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில். காலுறைகளுடன் பொருத்தமான காலணிகள், மேற்பூச்சு கார்டிகோஸ்டெராய்டு களிம்புகள், அமைப்பு முறை கார்டிகோஸ்டெராய்டுகள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.
வாழ்க்கைமுறை மேலாண்மை
நீங்கள் எக்ஸிமாவைத் தடுப்பதற்கும் அல்லது திரும்ப வருவதைக் கட்டுப்படுத்தவும் ஒரு சில அளவீடுகள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயத்தினை தெரிந்து கொள்வோம்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
எரிச்சலூட்டும் பொருட்களோடு சருமம் எந்த விதத்திலும் தொடாமல் தவிருங்கள்.
வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துங்கள்.
தியானம் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகளை மேற்கொண்டு மன அழுத்தத்தையும், மனம் அலைபாய்வதையும் கட்டுப்படுத்தவும்.
குறிப்பாக எடையை சரியாக பராமரிக்கவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றவும் வேண்டும்.
எக்ஸிமாவால் உங்கள் தோல் பரப்பு ஏதேனும் பாதிக்கப்பட்டால், அதை சொறிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் உங்களது நகத்தை வெட்டுவது மேலும் நல்லதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |