Skin Cancer: இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடாதீங்க... தோல் புற்றுநோயாக இருக்கலாம்
தோல் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதன் வகைகளை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
தோல்
மனித உடம்பில் மிகப்பெரிய உறுப்பு தோல் என்று கூறலாம். நமது உடலை வெளிப்புற சூழலில் பாதுகாப்பதற்கு மிகப்பெரிய பங்கு அளிக்கின்றது.
இன்றைய காலத்தில் புற்றுநோய் என்பது பரவலாக காணப்பட்டு வருகின்றது. புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது. அதில் ஒன்று தான் தோல் புற்றுநோய் ஆகும்.
தோல் புற்றுநோய் என்பது உலகளவில் பொதுவாக வகை புற்றுநோயாக பார்க்கப்படுகின்றது. இதனை பல எச்சரிக்கை அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.
குறிப்பாக தோல் மாற்றங்கள், அசாதாரண புள்ளிகள், மருக்கள், ரத்தப்போக்கு, புண் இவற்றினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இவற்றினைக் கொண்டும் அறியமுடியாதவர்கள் தோலில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.தோல் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும்.
![Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்](https://cdn.ibcstack.com/article/e41b08a3-e02b-4259-a3d6-eea6d3a9a943/24-6765442bbf32b-sm.webp)
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
தோல் புற்றுநோய் என்றால் என்ன?
சூரியனின் அதிகப்படியாக தோல் வெளிப்படும் போது செல்களின் அசாதாரண வளர்ச்சி உண்டாகின்றது. மேலும் சூரிய ஒளி படாத இடத்தில் கூட வெளிப்படலாம்.
தோலில் ஏற்படும் அறிகுறிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்கள் நீடித்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.
ஏனெனில் ஆரம்ப காலக்கட்டத்தில் இவற்றினை அவதானித்துவிட்டால் குணப்படுத்துவது என்பது மிகவும் எளிதாகும்.
தோல் புற்றுநோய் வகைகள்
தோல் புற்றுநோய் மூன்று வகைகளாக காணப்படுகின்றது. இதன் அறிகுறிகள் அவை எந்த வகையான செல்களை பாதிக்கின்றது என்பதை பொறுத்து பிரிக்கப்படுகின்றது.
பாசல் செல் கார்சினோமா (basal cell carcinoma), ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma), மெலனோமா (melanoma) என மூன்று வகைப்படுகின்றது. ஒவ்வொரு வகையின் அறிகுறிகளை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பாசல் செல் கார்சினோமா அறிகுறிகள்
தோலின் மேல் அடுக்கின் அடிப்பகுதியில் உள்ள அடித்தள செல்களில் உருவாகிறது. அதாவது தோலில் சூரிய ஒளி படும் இடங்களில் வருவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. மற்ற இடங்களில் எப்போதாவது ஏற்படுமாம்.
புண் ஆறாமல் இருப்பது, குணமாகிய புண் மீண்டும் வருவது, இதனை கவனிக்காத தருணத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது அறிகுறியாகும்.
குறித்த புண் இளஞ்சிவப்பு நிறத்திலும், சில நேரங்களில் இரத்தநாளங்கள் சிறிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுருவும் நிலையில் இருக்குமாம்.
மேலும் கருப்பு, நீலம் அல்லது பழுப்பு நிற பகுதிகளை கொண்டிருப்பதுடன், அரிப்பு இருக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கலாம். அதுமட்டுமின்றி வெளிர் அல்லது மஞ்சள் வடுமை ஒத்த தட்டையான மற்றும் உறுதியான பகுதியை கொண்டிருக்கும்.
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா அறிகுறிகள்
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா செதில் உயிரணுக்களில் உருவாகிறது. தோலின் மேற்பரப்புக்கு அருகில் தட்டையான செல்கள் என பல்வேறு தோற்றங்களை உருவாக்கலாம்.
கடினமான சிவப்பு செதில் இணைப்பு, திறந்த புண் போன்று குவிந்தும் வளரும். மரு போன்றும், தோல்கள் தடித்து கொம்பு போன்ற வளர்ச்சியையும் கொண்டிருக்கலாம்.
சில வாரங்களில் உடலில் மற்ற பாகங்களிலும் அறிகுறிகள் பரவலாம். பிறப்புறுப்பு, கருப்பை வாய் மற்றும் ஆண்குறி, பெண்கள் யோனியிலும் உண்டாகலாம்.
மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த வகையான தோல் புற்றுநோயினால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்.
மெலனோமா அறிகுறிகள் என்ன?
மெலனோசைட்டுகள் எனப்படும் உயிரணுக்களில் உருவாவதுடன், தோலின் நிறத்தை கொடுக்கும் நிறமியை உருவாக்குகிறது.
இந்த தோல் புற்றுநோய் இறப்புகளில் பெரும்பாலானவை. மச்சத்தில் மாற்றத்தினை உண்டு செய்யும். மச்சம் அல்லது காயம் சமச்சீரற்ற தன்மையை கொண்டிருக்கும். அதாவது ஒரு பாதி ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் காணப்படும்.
குறித்த மச்சங்களின் விளிம்புகளும் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். இதன் நிறமானது சிவப்பு, நீலம், கருப்பு, இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை போன்ற வண்ணங்களில் இருக்கும்.
மேலும் மச்சங்களில் அளவும் கால் அங்குலத்திற்கு மேல் இருக்கும். சாதாரண மச்சத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தனித்துவமாக தெரியுமாம்.
பொதுவாக அறிகுறிகள்
தோல் புற்றுநோயின் பொதுவாக அறிகுறிகளில் ஒன்று தான் ஆறாத வடுவாகும். பொதுவாக கழுத்து அல்லது முகத்தில் காணப்படுகிறது. இது ஒரு வெள்ளை அல்லது பழுப்பு நிற மெழுகு நிறமாகத் தோன்றுகிறது.
தோலின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதாவது எந்த பகுதியும் சுற்றியுள்ள தோலை விட கருமையாக அல்லது இலகுவாக இருந்தால் அதுவும் புற்றுநோயின் அறிகுறியாகும்.
செதில் திட்டுக்கள் போட்டு இருக்கக்கூடிய தோல் புற்றுநோய்க்கு அறிகுறியாகும். இவை பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் திட்டுக்களாகவும், அரிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கும்.
தோலின் வளர்ச்சி சில இடங்களில் அசாதாரணமாக இருந்தால் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அரிப்பு மற்றும் வலியை உணர்ந்தால் அவை தோல் புற்றுநோயின் அறிகுறியாகும். மேலும் இவை ரத்தப்போக்கு மற்றும் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |