தினம் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
அன்னாசிப்பழத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் உள்ளன. உடல் ஊட்டச்சத்தின் குறைபாட்டில் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் உணவில் சிறிதளவு அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இந்த சத்துக்களின் குறைபாட்டை நீக்கலாம்.அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
உடல் ஊட்டச்சத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்க இது ழுழுக்க ழுழுக்க உதவியாக இருக்கும். இதை வெறும் பழமாக சாப்பிட பிடிக்காதவர்கள் தேனுடன் அல்லது வேறுவிதமாகவும் உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். இதை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றம் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் கால்சியம் மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இது நமது உடலில் உள்ள எலும்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு இதிலுள்ள மாங்கனீசு சத்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
தினசரி டயட்டில் இருப்பவர்கள் குறைந்த அளவில் அன்னாசிப்பழத்தைச் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு பிரச்சனைகள் தொடர்பான எந்த நோயையும் வராமல் தடுக்கலாம். அன்னாசிப்பழம் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் எனும் பதார்த்தம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பு உள்ளது. இதனால் இது இதய ஆராக்கியத்தில் பங்களிப்பு செய்யும்.
அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி பழச்சாற்றுடன் ஆரோக்கியமாக காலைச் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதில் வெற்றி காணலாம். இதில் இருக்கும் கால்சியம் பல் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது.
அன்னாசிப்பழம் ஈறு பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாகும். தினமும் உங்கள் உணவில் மிதமான அளவு அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், பற்களில் பாக்டீரியாவின் தாக்குதல் குறைந்து, பற்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். சிலருக்கு பற்களில் உண்டாகம் துர்நாற்றமும் விலகும்.
கண் பார்வையைப் பராமரிக்க அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விழிப்புள்ளிச் சிதைவிலிருந்து இருந்து அன்னாசிப்ழம் பாதுகாப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் விழிப்புள்ளி சிதைவு வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கண்பார்வை துல்லியமாக இருப்பதற்கு இந்த பழத்தை தினம் சாப்பிடா விட்டாலும் வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |