வாழ்நாளில் இந்த தவறுகளை மட்டும் எப்போதும் செய்யாதீங்க... பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்
நம் வாழ்வில் அன்றாட பழக்கவழக்கம் என்பது அதிகமாகவே மாறி வருகின்றது. அதிலும் உணவு விடயத்தில் அதிகமான மாற்றத்தை சந்தித்து வருகின்றோம்.
உணவின் முக்கியத்துவம்
பொதுவாக காலை உணவை 9 மணிக்கு முன்பே முடித்துவிட வேண்டும். அப்பொழுது தான் நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் பெற முடியும்.
இரவு வேலை காரணமாகவோ, தூக்கம் காரணமாவோ, உங்களது காலை உணவை தாமதிக்ககக்கூடாது.
அதேபோல உங்களது இரவு உணவையும் தூங்குவதற்கு முன்பு 3 - 4 மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அது உங்களது உணவை ஜீரணிக்க உதவி செரிமானத்தை சீராக வைத்திருக்கும்.
உணவின் நாம் காட்டும் அலட்சியம் இதய ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இருதய பராமரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு காலை உணவானது முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடை, இரத்த அழுத்தம் மற்றும் மனிதர்களில் வீக்கம் போன்றவையானது இரவு உணவை 12 மணி நேரத்திற்கு மேலாக உண்ணாமல் இருப்பது ஏற்படுத்தக்கூடும்.
காலை உணவு மற்றும் இரவு உணவினை தமாதாக உட்கொள்வதன் மூலம் type-2 சர்க்கரை நோய் அபாயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இரவு 9 மணிக்குப் பிறகு சாப்பிடுவது CVD ஆபத்தை 13% அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி Cerebrovascular நோய் அபாயம் 8% அதிகரிக்கிறது. எனவே உணவை தாமதிக்கும் ஒவ்வொரு நேரத்திற்கும் நோய் அபாயமானது அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |