உடல் எடையை குறைக்க சிரமப்படுகின்றீர்களா? இந்த சப்பாத்தியை சாப்பிடுங்க
உடல் எடையை குறைப்பதற்கு கோதுமை சப்பாத்தி எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோதுமை சப்பாத்தி
சப்பாத்தி (Chapati) எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
சப்பாத்தியானது நம்மில் பெரும்பாலானோர் விரும்பப்படும் உணவாக இருக்கிறது. இவற்றில் காணப்படும் ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன.
சப்பாத்தியின் நன்மைகள்:
சப்பாத்தியில் கலோரியானது குறைந்து உள்ளமையால் இது உடல் எடையை குறைக்கவோ அல்லது கட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ உதவுகிறது. அதுமட்டுமின்றி நீண்ட நேரம் பசி உணர்வையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
நோய் எதிர்ப்பு தன்மை, சர்க்கரை நோய்,போன்றவற்றில் இருந்து விடுபட சப்பாத்தியை உட்கொள்ளலாம்.
சருமத்தை பளபளப்பூட்டும் வகையில் zinc மற்றும் இதர mineral சத்துக்களானது இந்த சப்பாத்தியில் உள்ளது.
நாள் முழுவதும் ஆற்றலூட்டும் திறனானது இந்த கோதுமையில் உள்ள carbohydrate அளிக்கிறது.
சப்பாத்தியில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்த அளவை கட்டுக்குள் வைக்கவும் குறையாதவாறும் பாதுகாத்துக் கொள்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |