வெயில் காலத்தில் உடல் சூடுபிடிக்கக்கூடாதா? இந்த உணவை கட்டாயம் சாப்பிடுங்க
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகும் நிலையில், உடல் சூடுபிடிக்காமல் இருப்பதற்கு நாம் என்னென்ன காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடுகின்றது. சரியான அளவில் தண்ணீர் குடிக்காமலும், தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், காய்கள் உட்கொள்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால் இவை மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு வெயில் காலங்களில் உடல் சூடுபிடிக்கும் நிலைக்கும் சென்றுவிடுகின்றது.
அவ்வாறு வெப்பத்தினால் உடல் சூடுபிடிக்காமல் இருப்பதற்கு என்னென்ன காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

வாழைத்தண்டு
அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறியில் ஒன்று வாழைத்தண்டு. இதில் நீர்ச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் அதிகமாக இருக்கின்றது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு சிறந்ததாக இருக்கின்றது. குடலை எப்பொழுதும் குளிர்ச்சியாகவே வைக்கின்றது. கோடையில் வாழைத்தண்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்கள் மட்டுமின்றி நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் காய்களில் ஒன்று தான் சுரைக்காய். கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்பினை பதடுக்க உதவுகின்றது. ஆதலால் கோடையில் அதிகமாக சாப்பிடலாம்.

வெள்ளை பூசணி
சுரைக்காயைப் போன்று வெள்ளை பூசணியும் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றது. இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஆகையால் கோடையில் ஏற்படும் உடல்வறட்சி, உடல் சூடு பிரச்சனை தடுக்க உதவும் வெள்ளை பூசணியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

நார்ச்சத்து அதிகம் கொண்டு காய்கறில் ஒன்று கீரை ஆகும். இவை உடல் சூட்டை கட்டுப்படுத்த செய்வதுடன், இரும்புச்சத்தும் ஏராளமாக இருக்கின்றது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது சிறந்தது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |