படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இத சாப்பிடுங்க!
பொதுவாக குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள்.
இந்த பழக்கத்தை கிராமங்களில் “இரவு நேர அடங்காமை” என அழைப்பார்கள்.
மேலும் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குறிப்பிட்ட வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு தான் வரவேண்டும் என்றெல்லாம் இல்லை.
மாறாக வளர்ந்த பிள்ளைகள், பதின்ம வயது பிள்ளைகள், டீன் ஏஜ் வயதினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் இப்படி பலருக்கும் இந்த பிரச்சினை இருக்கின்றது.
அந்த வகையில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏன் வருகின்றது? அதற்கான தீர்வு என அனைத்து விடயங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.
image - myfitbrain
பொதுவாக வீடுகளில் 7 வயதுக்குள் இருக்கும் குழந்தை படுக்கையை நனைப்பது இயல்பானது. ஆனால் பருவம் வந்த பின்னர் பிள்ளைகள் படுக்கையை நனைப்பது ஏன் என தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இந்த பிரச்சனையை கொண்டிருப்பது என எல்லாமே கவனிக்க வேண்டிய ஒன்று. அத்துடன் வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.
தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது தன்னை அறியாமல் வெளியேறும் ஒரு செயலாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளாக இருப்பவர்கள் படுக்கைக்கு செல்லும் முன்னர் அவர்களை ஒரு தடவை சிறுநீர் கழிக்க விட வேண்டும்.
image - motherandbaby
இதனை தொடர்ந்து குழந்தைகள் வளரும் போது அவர்கள் இரவு நேரங்களில் சரியாக சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு செல்கிறார்களா? எனவும் கவனித்தில் கொள்ள வேண்டும்.
காரணங்கள்
1. இயல்பு
2. பழக்கம்
3. ஹார்மோன்கள் மாற்றம்
4. போதைப்பொருள் பாவனை
5. தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்துகள் எடுப்பது
6. உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு மருந்துகள் எடுப்பது
7. சர்க்கரை நோயாளி
8. வயது
9. பயம்
10. அறியாமை
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |