இருமும் போது சிறுநீர் கசிகிறதா?
சிறுநீரக தொற்று என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும்.
சிறுநீரை கட்டுப்படுத்தும் தசைகள் வலுவிழப்பதன் மூலமாக இந்த கசிவு ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு இதனால் வரும் பாதிப்புகள் அதிகம் என சொல்லலாம்.
இந்த சிறுநீர் கசியும் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என காரணங்களை கண்டுபிடித்து விட்டால் இயற்கை முறையிலேயே இதனை குணப்படுத்தி விடலாம்.
சிறுநீர் கசிவு எதனால் ஏற்படுகிறது?
* பெண்களுக்கு பொதுவாகவே சிறுநீர்ப்பை பெரிதாக காணப்படும். இதன் காரணமாக வெகு நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் அதுவே தொற்றுக்கள் ஏற்பட காரணமாகி விடும்.
* ஒழுங்காக நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும் ஒரே இடத்தில் இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகிறது.
* ஒவ்வொருவரின் உடல் அளவிற்கேற்ப தண்ணீர் அருந்துதல் அவசியம்.ஆனால் தேவைக்கு அதிகமான அளவு தண்ணீர் அருந்துதல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வினையும் மற்றும் சிறுநீரகப்பையினை சீக்கிரம் பாதிப்படையவும் செய்துவிடும்.
* அளவிற்கு அதிகமான அளவு குளிர்பானம் மற்றும் தேநீர் அருந்துதல் அத்தோடு காஃபைன் உள்ளடக்கப்பட்ட கோப்பி பானங்களை பருகுவதால் கூட இவ்வாறு தொற்றுக்கள் எற்படலாம்.
* நீங்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் நபராக இருந்தால் உங்களுக்கு பொது இடங்களில் சிறுநீர் கழிக்க முடியாது இருக்கும் இதனாலும் உங்களுக்கு சிறுநீர் பிரச்சினை ஏற்படலாம்.
ஈரமான உள்ளாடைகளை அணிவதாலும் தொற்றுக்ள் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அறிகுறிகள்
- சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படல்.
- அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் போன்ற உணர்வு தோன்றுதல்.
- சிறுநீரோடு இரத்தம் கசிதல்.
- அடி வயிற்றில் வலி மற்றும் அழுத்தம் போன்று ஏற்படல்.
சிறுநீர் தொற்று குணமாக வழிகள்
- தேவையான அளவு தண்ணீர் அருந்துதல்.
- கடையில் விற்கும் பானங்களை அருந்துவதை தவிர்த்தல்.
- சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனடியாக சிறுநீர் கழித்தல்.
- உங்கள் அன்றாட உணவில் வெள்ளைப்பூடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் அந்தரங்க உறுப்பினை சுத்தம் செய்யும்போது முன்னிலிருந்து பின்னாக சுத்தம் செய்ய வேண்டும்.