படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்! ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்
அமெரிக்காவில் காதலன் ஒருவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த காதலி அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்
அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ப்ரையானா லாகோஸ்ட்.. இவரும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக ஒரே அறையில் ஒரே படுக்கையிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர். இதற்காக பிரேக் அப் பார்ட்டி கொண்டாட இருவரும் சென்றுவிட்டு, மது அருந்தி போதையில் வீட்டில் வந்து தூங்கியுள்ளனர்.
ப்ரையானா காலையில் எழுந்து பார்த்த போது காதலன் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளதைக் கண்டு கடும் கோபமடைந்து, அவரை தாக்கியுள்ளார்.
பதிலுக்கு காதலனும் தாக்கியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த காதலி காதலனை கத்தியால் குத்தியுள்ளார். பின்பு காதலனை அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவத்தை அறிந்த பொலிசார் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.