இந்த உணவுகளை உண்ணுங்கள்...மாரடைப்பு அபாயத்தை முடிந்தளவு குறைக்கலாம்!
முன்பெல்லாம் வயதானவர்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே மாரடைப்பு அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவுப் பழக்கம் இருக்கின்றது.
சரி இனி மாரடைப்பை தடுக்கும் உணவுகளைப் பார்க்கலாம்.
image - harverd health
பழங்கள், காய்கறிகள் - காய்கறிகள் மற்றும் பழங்களில் பொட்டாசியம், விட்டமின்கள், போலிக் அமிலம் என்பவை உள்ளடங்கியுள்ளன. அதனால் இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதற்கு மிகவும் உதவும்.
பால் பொருட்கள் - பால் சார்ந்த பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றில் எதில் கொழுப்பு குறைவாக இருக்கின்றதோ அவற்றை உட்கொள்வது சிறந்தது.
முழு தானியங்கள் - இதில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. இது இதயநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமாத்திரமின்றி இது உடல் பருமனையும் குறைக்கும்.
நிறைவுற்ற கொழுப்பு - கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தெரிவு செய்து உண்ண வேண்டும். நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு உள்ளடங்கிய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தலாம்.