மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க

Heart Attack
By Rooban Jul 01, 2022 06:06 AM GMT
Rooban

Rooban

Report

இன்றைய அவசர காலகட்டத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஆபத்து அதிகமாக உள்ளது. உங்களின் உடலின் மீது அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்ள சில விஷயங்களில் நீங்கள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிலும், உடலமைப்பில் கட்டுமஸ்தானவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், அந்த எண்ணம் தவறானது, விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பால் இறந்து வருவது அதிகம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்துகொள்வோம்.

Heart Attack

மாரடைப்பு அறிகுறிகள்

மாரடைப்பு ஏற்பட அறிகுறிகளாக மார்பு வலி, அமைதியின்மை மற்றும் வியர்வை போன்ற பிரச்சனைகள் இருந்தால், இவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

தாடை வலி

தாடையின் பின்புறத்தில் வலி லேசான மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் தாடையில் இருந்து வலி ஆரம்பித்து கழுத்து வரை பரவுகிறது.

இந்த வலி திடீரென ஏற்படுகிறது. இந்த வலி இருந்தால் இதை கண்டிப்பாக அலட்சியப்படுத்தக்கூடாது.

மூச்சுத் திணறல் மயக்கம்

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உங்கள் இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

இதை தவிர, மூச்சு விடுவதில் சிரமம், தலைசுற்றல், நெஞ்சு வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

திடீரென வியர்த்தல்

இரவில் திடீரென வியர்க்க ஆரம்பித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியையும் புறக்கணிக்காதீர்கள்.

ஏப்பம் வயிற்று வலி

பலருக்கும் வயிற்று வலி பிரச்சினைகள் மாரடைப்பு அறிகுறியாக இருக்கலாம். ஏப்பம் வயிற்று வலி அனைத்தும் லேசான மாரடைப்பின் அறிகுறிகள்.

உள்ளங்கையில் வலி

உள்ளங்கை மற்றும் கைப் பகுதிகளில் வலி ஏற்படுவது அதற்கு காரணமாக இருக்கும். இடது கை பகுதியில் வலி து இருப்பின் அவற்றை நாம் கவனிக்காமல் போய் விடக்கூடாது. இது ஒரு வித்தியாசமான அறிகுறி தான்.

கடினமான வேலை ஏதேனும் செய்தால் உள்ளங்கையில் சிலசமயங்களில் வலி உண்டாகும். ஆனால் அது மாரடைப்பிற்கான அறிகுறிகளில் ஒன்று என்பதை நாம் உணர்ந்திருக்கவே மாட்டோம்.

மாரடைப்பு  வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க | Heart Attack Symptoms In Tamil

இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட காரணம்

போதைப்பொருள் பயன்படுத்துதல்

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளுதல்

புகைப்பழக்கம்

உயர் இரத்த அழுத்தம்

அதிக கொலஸ்ட்ரால் அளவு

உடற்செயல்பாட்டில் ஈடுபடாமல் இருத்தல்

நீரிழிவு நோய்

மோசமான உணவுப்பழக்கம்

உடல் பருமனும் மாரடைப்புக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

மாரடைப்பு  வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க | Heart Attack Symptoms In Tamil

தடுக்கும் வழிமுறைகள்

உங்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் தவறாமல் மருத்துவரை அணுகவும்.

வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தது 30-45 நிமிடங்கள் வழக்கமான உடல் செயல்பாடு இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகள் இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர் கூறுகிறார்.

மறுபுறம், அதிக எடை தூக்குவது உங்கள் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

டிவியைப் பார்ப்பது உண்மையில் ஒரு இடைவெளியாக கருதப்படுவதில்லை, ஏனென்றால் நீங்கள் இன்னும் வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம்.

புகை பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அதை மிதமாகச் செய்வது ஒன்றும் உதவாது. ஒரு நாளில் ஒரு சிகரெட் புகைத்தாலும் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்.

உங்கள் மன ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு நபருக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கிறது என்பதற்கு அளவீடு இல்லை, இதன் காரணமாக அது அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது.

உங்கள் உணவில் தினமும் 250-200 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு உட்கொள்ளும் அளவைக் குறைக்கவும். குளிர்பானங்கள் போன்ற வெற்று சர்க்கரைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நீங்கள் இவற்றைக் கவனித்துக்கொண்டால், உங்களுக்கு எதுவும் நடக்காமல் இருக்க 95-98 சதவிகிதம் நல்ல வாய்ப்பு உள்ளது.

மாரடைப்பு  வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க | Heart Attack Symptoms In Tamil

இதயத்தை பாதுகாக்க

பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம்.

குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாரடைப்பு  வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க | Heart Attack Symptoms In Tamil

சாப்பிட வேண்டிய உணவுமுறைகள்

பூண்டு

இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது.

இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.

மாதுளை

இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

திராட்சை

எண்ணற்ற அளவில் பிளவானட்ஸ் மற்றும் வைட்டமின் சி கொண்ட பழ வகைகளில் இந்த திராட்சையும் ஒன்று. இது மாரடைப்பு ஏற்படுவதை 20 சதவீதம் வரை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தக்காளி

உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்து கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து உடல் நலம் நன்றாக இருக்கும். குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.

பாதாம்

வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம் இதயத்திற்கு பல வித நன்மைகளை தரும். பெர்ரி மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பழம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

ராஸ்பெர்ரி

இந்த ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும்.

இந்த பழத்தை உண்மையில் சாப்பிடப்போனால் இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதய நோயாளிகளுக்கு ஆப்பிள் ஒரு சஞ்சீவி என்று நம்பப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வரலாம்.

மாரடைப்பு  வருவதற்கான அறிகுறிகள்... தடுக்கும் வழிமுறைகளும்! கட்டாயம் இதை ஃபலோ பண்ணுங்க | Heart Attack Symptoms In Tamil

யோகா

மாராடைப்பு வராமல் தடுக்கும் ஒரு பயிற்சி யோகாவை எப்படி பின்பற்றலாம். யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும்.

சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும்.

வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US