கண் பார்வையில் பிரச்சினையா? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!
தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சினை என்றால், அது கண்பார்வைக் குறைபாடுதான்.
யாரைப் பார்த்தாலும் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அந்தளவுக்கு கண்பார்வைக் குறைபாடு தலைதூக்கி ஆடுகின்றது.
உடலிலுள்ள உணர்திறன் வாய்ந்த உறுப்புக்களில் மிகவும் முக்கியமானது கண்கள். கண்கள் இல்லாவிட்டால் எம்மால் இவ்வுலகை ரசிக்க இயலாது.
அந்தக் காலத்தில் இருந்தவர்களை எடுத்துக்கொண்டால் தற்போது வரையில் கண்ணாடி அணியாமல் வாசிப்பது, தூரத்தில் வரும் பேரூந்தின் இலக்கத்தை கண்டுபிடிப்பது போன்றவற்றையும் செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அந்தக் காலத்தில் உண்ட சத்தான உணவுகள்தான்.
ஆனால், இந்தக் காலத்தில் உணவுப் பழக்கவழக்கத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. இதனால் கண் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கண் பிரச்சினை வராமல் இருக்க சில உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.
விட்டமின் ஈ - முழு கோதுமை, முந்திரி, காய்கறிகள் என்பவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ரிபோபிளேவின் - புரொக்கோலி, பனீர், சோயா பீன்ஸ் என்பவற்றில் பி2 அல்லது பிபோபிளேவின் அதிகமாகக் காணப்படுகிறது.
ஒமேகா 3 - ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட், டூனா ஆகியவற்றில் ஒமேகா 3 உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்தும்.
கல்சியம் - ஓட்ஸ், பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
விட்டமின் ஏ - மாம்பழம், கேரட், கீரைகள், பப்பாளி, காய்கறிகள், பால் என்பவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.