நள்ளிரவில் திடீரென பசி வந்து விட்டதா? என்ன செய்யவேண்டும்?
பொதுவாக இரவில் நிம்மதியாக தூங்குவது என்பது பலரால் செய்ய முடியாத ஒரு வகை டாஸ்க்காக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இரவில் தூங்குவதற்கு சென்ற பின்னர் தான் தூக்கம் வராது, கனவுகள் வரும், பயமாக இருக்கும், பசி வரும் என ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும்.
இதன்படி, இரவில் சிலருக்கு பசி வரும். இதனால் அவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
அப்போது ஏதாவது சாப்பிட்டு விட்டு தூக்கத்தை தொடரலாம் என்று சிலர் நினைப்பார்கள், ஆனாலும் அப்படி செய்தால் தூக்கம் கலைந்து விடும் என்று எண்ணி பசியால் தூங்குவார்கள்.
ஆனால் இப்படி தூங்குவதினால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது. நள்ளிரவில் பசி வந்தால் அப்படி என்ன தான் சாப்பிடுவது என சிலருக்கு குழப்பம் இருக்கும். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இரவு நேர பசியை விரட்டியடிக்கும் உணவுகள்
1. வாழைப்பழம்
இரவில் பசி வந்தால் உணவுகள் ஏதுவும் இல்லாவிட்டால் வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் நமது உடலில் ரத்தத்தில் மெலடோனின் அளவு 4 மடங்குக்கு மேல் அதிகரிக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் நம் உடலின் தூக்க சுழற்சியை கட்டுப்படுத்த மெலடோனின் உதவுகிறது.
2. ஓட்மீல்
இரவில் பசி வந்து விட்டால் தூக்கம் கலையும் முன்னர் வெதுவெதுப்பான சூட்டில் ஓட்மீலை தயார் செய்து சாப்பிடலாம். இதற்காக இலவங்கப்பட்டை மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.
3. யோகர்ட்
பொதுவாக பாலுணவுகளில் ஒன்றான யோகர்ட்டில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதனால் இரவில் பசியெடுத்தால் தாராளமாக யோகர்ட் சாப்பிடலாம்.
டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்திலிருந்து மெலடோனின் தயாரிக்க நம் உடலுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. இது தூக்கத்திலிருந்து எம்மை பாதிக்காமல் பசியை இல்லாமல் செய்கின்றது.
4. முட்டை
இரவு மட்டுமல்ல எப்போது பசி எடுத்தாலும் நாம் முட்டையில் ஏதாவது செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது பசியையும் இல்லாமல் செய்கின்றது. மேலும் முட்டையில் 72 கலோரிகள் மட்டுமே உள்ளது.
5. கிவி
சிற்றுண்டிகள் என பார்க்கும் போது கிவிப்பழம் திருப்திகரமான சிற்றுண்டியாக பார்க்கப்படுகின்றது. இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. தூக்கம் குறைந்து விடும் என பயம் இருந்தால் இந்த பழங்களை சாப்பிடுவதனை குறைத்து கொள்ளவும் இது ஆய்வுகளிலிருந்து வெளியான தகவல்.