கொலஸ்ரோலை கட்டுபடுத்தும் லிச்சிபழம்! இதிலிருக்கும் நன்மைகள் என்னென்ன, தவிர்க்க வேண்டியவர்கள் யார்?
பொதுவாக கோடைக்காலங்களில் உடல் நீரேற்றத்தை அதிகரிப்பதற்காக பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகமாக உட்கொள்கிறார்கள்.
இது போல் கோடைக்காலங்களில் லிச்சிபழம் எடுத்து கொண்டால் எண்ணற்ற நன்மைகள் எமக்கு கிடைக்கின்றன.
ஏனெனின் லிச்சிபழத்தில் வைட்டமின் சி, தாமிரம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் லிச்சியில் பாலிபினால் ஒலிகோனால் உள்ளது.
அந்த வகையில் லிச்சிப்பழத்தில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
லிச்சிப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. கல்லீரல் பிரச்சினை
லிச்சிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சினைகள் சரிச் செய்யப்படுகின்றது. நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ள உதவுகின்றது.
2. செரிமான அமைப்பு
செரிமான அமைப்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் லிச்சிப்பழம் சாப்பிட வேண்டும். மருந்து மாத்திரைகள் இல்லாமல் செரிமான பிரச்சினை சரியாகும். லிச்சியில் நார்ச்சத்து அதிகம் இருக்கின்றது இது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.
3. இதயம் ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்திற்கு லிச்சிப்பழம் உதவியாக இருக்கின்றது. சாப்பாட்டிற்கு பின்னர் லிச்சிபழம் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் பிபி கட்டுக்குள் இருக்கும்.
4. எடை குறையும்
லிச்சிப்பழத்தில் பல வகையான ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் லிச்சிப்பழம் சாப்பிடலாம். இது விரைவாக உடல் எடையை குறைக்கும்.