மாவு பிசையாமல் இடியாப்பம் செய்ய தெரியுமா? இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இடியாப்பம், இட்லி என்றால் அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
குழந்தைகளை காலை மற்றும் இரவில் சாப்பிட வைப்பதற்காக இப்படி வித்தியாசமான உணவு வகைகளை அம்மாக்கள் செய்து அசத்துவார்கள்.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் ஈஸியாக என்ன செய்ய முடியுமோ அந்த உணவை செய்வதால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இந்த வரிசையில் இடியாப்பம் செய்வதற்கு மாவை நன்றாக பிசைந்து அதன் பின்னர் இடியாப்பம் பிழியும் தட்டில் பிழிந்து இப்படி தான் செய்வார்கள்.
மாறாக இடியாப்பம் மா பிசையாமல் எப்படி இடியாப்பம் செய்வது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா - 2 கப்
- தண்ணீர் - 3 கப்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
தேவையான அளவு அரிசியை மாவை கடாயில் போட்டு அதில் தண்ணீர், உப்பு, எண்ணெய் இவற்றை கொடுக்கப்பட்ட அளவில் சேர்க்கவும்.
பின்னர் நன்றாக கலந்து விட்டு அடுப்பில் கடாயை வைத்து சூடுப்படுத்தவும். ஆனால் மாவை கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்கவும்.
இப்படி தொடர்ந்து செய்தால் மா சூடாக சூடாக மா கெட்டியாக மாறும். கெட்டியானதும் அடுப்பை அனைத்து விட்டு இடியாப்பம் உரலால் இடியாப்பம் பிழியலாம்.
இடியாப்பம் தட்டு இல்லாதவர்கள் வெறும் கடாயை அடுப்பில் வைத்து அதனை சூடாக்கிய பின்னர் அடுப்பை மிதமான வெப்ப நிலையில் வைத்து கடாயில் இடியாப்பத்தை பிழிந்து விடவும்.
பிழிந்த பின்னர் மூடி போட்டு மூடி வைக்கவும். 2 நிமிடங்களின் பின்னர் திறந்து பார்த்தால் சுவையான வெள்ளை இடியாப்பம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |