Jio Air Fiberன் அசத்தல் திட்டம்: வெறும் ரூ.401ல் மட்டுமே
இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இன்டர்நெட்டை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிது என கூறலாம்.
அந்தளவுக்கு தினசரியும் குறைந்தது ஒரு மணிநேரமாவது இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்களும் மிக குறைந்த விலையில், புதுப்புது அம்சங்களுடன் அறிமுகமாகி கொண்டே இருக்கிறது.
எனவே இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களும் புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் Jio Air Fiber புதிய திட்டமொன்றை கொண்டு வந்துள்ளது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவின் ஒரு சில நகரங்களில் Wireless Broadband சேவையை கொண்டுவந்துள்ளது.
இதில் பல திட்டங்கள் இருந்தாலும் ரூ.401க்கான Data Booster Plan யை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 1TB-யை பெறலாம்.
1TB DATA தீர்ந்து போனவுடன் இந்த பிளான் Unlimited பிளான் ஆக மாறிவிடும், FUP படி (Fair Usages Policy) 64kbps வேகத்தில் இன்டர்நெட் வசதியை நீங்கள் பெறலாம்.
Introducing JioAirFiber! India's latest home entertainment and Wi-Fi service.
— Reliance Jio (@reliancejio) September 19, 2023
Now available. https://t.co/9WCqQdmViM#JioAirFiber pic.twitter.com/4QB2msbceI
இதற்கு Validity கிடையாது, இதனை Activate செய்ய Basic Plan ஒன்று தேவைப்படும், புதிதாகவோ அல்லது மாதாந்திர பிளானோ பெற்றுக்கொண்டு இந்த சேவையையும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக ஒரே பில்லிங் சைக்கிளில் நீங்கள் 401 ரூபாய் மதிப்பில் Data Booster பிளானாக Recharge செய்து கொள்ளலாம்.
இதன் வேகமானது உங்களது முந்தையை Plan-யை பொறுத்தே அமையும், ஏற்கனவே உங்களிடம் 100Mbps வேகம் கொண்ட AirFiber Plan இருந்தால், 1TB டேட்டாவும் 100Mbps வேகத்தில் கிடைக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் சில நகரங்களில் Jio Air Fiber சேவை விரிவாக்கம் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.