முகத்தில் கரும்புள்ளிகளை போக்க என்ன செய்யலாம்? எளிய அழகு குறிப்பு இதோ
கோடை காலத்தில் சருமத்தில் பிரச்சினை ஏற்படும் நிலையில், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கோடைகால கரும்புள்ளி
பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சிரமத்திற்குள் ஆளாகிவிடுகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, உடம்பில் நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருப்பதுடன், சில வியாதிகளையும் கொண்டு வந்து விடுகின்றது.
உடம்பில் மட்டும் பிரச்சினை ஏற்படுவதில்லை, சருமத்திலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அதில் ஒன்று தான் கோடை காலத்தில் ஏற்படும் கரும்புள்ளி.
கோடைக்காலம் வந்தாலே சரும பிரச்சினைகளும் உண்டாகி பெரும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால் வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டே சரும பிரச்சினையை தடுக்க முடியும்.
வெயிலில் பல இடங்களுக்கும் அலைய வேண்டியிருப்பவர்களுக்கு கரும்புள்ளிகள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளது.
அவ்வாறு கரும்புள்ளிகள் தோன்றினால் கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றி கரும்புள்ளிகளை போக்கி சருமத்தை அழகாக பராமரிக்க முடியும்.
கரும்புள்ளிகளுக்கு தீர்வு
எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பொலிவடையும்.
பப்பாளி பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி நன்கு மசித்துவிட்டு அதனுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழுக்கு நீங்கி பொலிவு ஏற்படும்.
கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஜாதிக்காயை அரைத்து முகத்தில் போட்டு வந்தால் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
முகத்தில் வெண்ணெய் தடவி, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வர முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |