குகையின் உள்ளே காணப்படும் அழகிய கிராமம்... எங்குள்ளது தெரியுமா?
மலையைக் குடைந்து அதில் பல இடங்களை அமைத்து வாழ்வதே குகையாகும் இந்த குகைகள் பொதுவாக ஒரு தனி மனிதன் தன் தேவைக்காக பயன்படுத்தியதை கண்டிருப்போம்.
அல்லது வாழ்வாதாரமற்ற மக்கள் வாழ்வதை கண்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கிராமமே ஒரு குகைக்குள் வாழ்கிறது இந்த கிராம மக்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்வதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இது பற்றிய இன்னும் பல சுவாரஸ்சியமான தகவலையும் இவர்களின் அடிப்படை தேவைகளை இவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்கின்றார்கள் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குகை கிராமம்
இந்த குகைக்கிராமம் சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் Guizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் என்ற பகுதியில் இருக்கும் ஒரு பெரிய மலையின் குகையில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது.
இங்கு சுமார் 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இருக்கிறது. இது சீனாவின் குகை கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு கிட்டதட்ட 18 குடும்பங்கள் இருக்கின்றன.
இவர்களுக்கான அடிப்படை வசதி எதுவும் இல்லை. இந்த குகை கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
இங்கு இருக்கும் மக்கள் வெளி உலக மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வது மிகவும் குறைவாக உள்ளது. இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கான பாடப்படிப்பை இங்கேயே பாடசாலை வைத்து ஆரம்பித்து வந்துள்ளனர்.
ஆனால் 2008 ம்ஆண்டு இங்கு மக்கள் வாழ்வதற்காக அரசினால் தடைவிதிக்கப்பட்டதும் இங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டன. ஆனால் மக்கள் மட்டும் பிடிவாதமாக இங்கு வாழ்கின்றனர்.
இங்கே இவர்கள் குடி கொண்டதற்கான காரணம் 1949 ஆம் ஆண்டு சீனாவில் நடத்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் மலைப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த குகையில் குடியேறியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, பல காலக்கட்டமாக அங்கேயே வாழ்ந்துவரும் இவர்கள், தங்களுக்கான வீடு, விவசாயம் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர்.
கடுமையான குளிர் மற்றும் வெப்பத்தின் இருந்து இப்பகுதி அவர்களை பாதுகாப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள சிறுவர்கள் பக்கத்திலுள்ள கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்றனர்.
2000 ம் ஆண்டிற்கு பின்னர் தான் இங்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளியூர்களுக்கு சென்றும் படிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |