காதில் அழுக்கு அதிகமானால் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
காதில் அழுக்கு எடுப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
காதில் மெழுகா?
பொதுவாக காதில் இயற்கையாகவே மெழுகு போன்ற அழுக்கு காணப்படும். இவை வெளியே இருந்து உள்ளே நுழையும் தூசு மற்றும் கிருமிகளை காதுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றது.
இவை அளவிற்கு அதிகமாக சேரும் பொழுது காது அடைப்பு, வலி மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

எவ்வாறு சுத்தம் செய்வது?
காதில் அழுக்கு அதிகமாகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின் படி, காதுக்கு சொட்டு மருந்து பயன்படுத்தலாம்.
இந்த சொட்டுமருந்தானது அழுக்கை மென்மையாக்கி தானாகவே வெளியே வருவதற்கு உதவி செய்கின்றது.

அதே போன்று குளித்த பின்பு காதின் வெளிப்புறத்தினை மென்மையான துணியால் துடைக்க வேண்டும். அதாவது காது மடல் மற்றும் காதின் பின் பகுதி இவற்றினை சுத்தமாக வைப்பது அவசியமாகும்.
வலி அல்லது அடைப்பு நீடித்திருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சுத்தம் செய்வது அவசியமாகும்.
செய்யக்கூடாதவை என்ன?
காதுக்குள் அரிப்பு ஏற்படும் போது, காட்டன் பட்ஸ், தலைக்கு பயன்படுத்தும் ஹேர் பின், குச்சி, தீக்குச்சி, பறவைகளின் இறகுகள் இவற்றினை பயன்படுத்தக்கூடாது.
ஏனெனில் இவை காதில் உள்ள அழுக்கை இன்னும் ஆழமாக உள்ளே தள்ளுவதுடன் ஜவ்வை கிழித்துவிடவும் செய்கின்றது.
அதுமட்டுமின்றி தானாக எந்தவொரு எண்ணெய்யையும் காதுக்குள் ஊற்றுவது கூடாது. காது அழுக்கை அகற்றுவதற்கு கூர்மையான பொருட்களையும் பயன்படுத்துவது தவறாகும். ஏனெனில் இவை காதுகேளாமையை ஏற்படுத்திவிடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |