திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..?
உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது.
நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் இருக்கலாம் எனவும் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே தோன்றும் அறிகுறிகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறையும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது.
தொற்று நோய்கள் மற்றும் சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் அதிகமாக காணபப்படுகின்றது.
Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் காரணமாக சிறுசீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் அதிகரிக்கின்றது.
சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு தொடக்கம் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரையான பாரிய பாதிப்புகள் வரை இதனுள் அடங்கும்.
முதல் கட்ட அறிகுறிகள்
பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் முதல் கட்ட அறிகுறியாக காணப்படுகின்றது.
எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகங்கள் கழிவு பொருட்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவத்தை வடிகட்ட சரியாக வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.
இந்த அறிகுறியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும்.
சிறுநீரக செயல்பாடு குறைதல், திரவம் தக்க வைக்கும் தன்மை குறைதல் போன்றவற்றின் அறிகுறியாகவே இது காணப்படுகின்றது.
உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்றும், மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீங்கள் உணர்ந்ததால், இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் போகும்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோமருலர் வடிகட்டுதல் அளவு குறைவதன் காரணமாக பசியின்மை அல்லது கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும். உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.
உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது.
தூக்கமில்லாத இரவுகள் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். எனினும், மேற் கூறிய அறிகுறிகளோடு தூக்கமின்மையும் இருந்தால் இது சிறுநீரகம் செயலிழப்புக்காக முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |