அதிகாலை 4.30 மணிக்கு அரங்கேறிய சம்பவம்! கனவு என்று நினைத்தவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அரங்கேறிய அதிர்ஷ்டத்தினை கனவு என்று நினைத்துள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மனிதர்கள் தூங்கும் போது கனவு வருவது இயல்பான விடயமே. இங்கு நபர் ஒருவருக்கு நிகழ்ந்த அதிர்ஷ்டத்தினை கனவு என்று நினைத்துள்ளார்.
முதல் நாள் சாதாரணமாக இருந்த இளைஞர் மறுநாள் கோடீஸ்வரராக மாறிய கதையை தெரிந்து கொள்ளலாம்.
கனடாவின், Ontario பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் அரவிந்த ராகேஷ் கஸ்தூரி(33). எப்பொழுதும் போன்று உறங்க சென்ற நபருக்கு திடீரென அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
மின்னஞ்சல் வந்த சத்தத்தினை வைத்து எழுந்த அவர் தனது மொபைல் போனை பார்த்த போது, லொட்டரி குலுக்கலில் ஒரு லட்சம் டாலர் பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தூக்க கலக்கத்தில் அதனை அவதானித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு தூங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை எழுந்ததும் தான் அவதானித்த மின்னஞ்சல் கனவு என்று நினைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'மின்னஞ்சலை பார்த்த மறுநாள் வரை எனக்கு நடந்த சம்பவங்கள் எல்லாமே கனவு போல இருந்தது. கனவு என்று நினைத்த நான் மீண்டும் இமெயில் பரிசோதனை செய்ய விரும்பவில்லை.
அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்ட நிலையில், அடுத்தநாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன்.
இந்த நிகழ்வை எனது மனைவியுடன் கூறிய போது அவர் நம்பாமல் மீண்டும் நன்றாக சரிபாருங்கள் என்று கூறியுள்ளார்.தற்போது பரிசு தொகையில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை' என கூறியுள்ளார்.
