தலைமுடிக்கு அடிக்கடி டை அடிக்கிறீங்களா?அப்போ இதை செய்ங்க
தலைமுடிக்கு அடிக்கடி டை அடிக்கும் போது தலைமுடி எந்த விஷயத்தினால் பாதிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கவனிக்க வேண்டுயவை
பலர் தங்களின் தனித்துவத்தை எடுத்துக்காட்ட பல நிறங்களை கொண்ட டைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் பெரும்பாலானோர் இளநரையை மறைப்பதற்கு நிறம் பூசிக்கொள்கின்றனர்.
இதனால் வரும் பாதிப்புக்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இதில் சிலர் இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துகின்றனர். இது ஒரு சிலருக்கு அலர்ஜியை கொடுக்கும்.
இதை முதலில் காதோரம் அல்லது கை முடிகளில் சிறிதளவு கலந்து தேய்ந்து அரிப்பு, நமைச்சல் அல்லது எரிச்சல் என ஏதாவது இருக்கிறதா? என்பதை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி எதுவும் இல்லை என்றால் மட்டுமே தலை முழுவதும் டை பயன்படுத்த வேண்டும். டை அடிக்கும்போது உச்சந்தலை மற்றும் முடிகளில் மட்டுமே படும்வகையில் டை அடிக்க வேண்டும்.
இது முகத்தில் படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பட்டால் முகம் கருத்துப் போவதோடு, புருவங்களும் நரைக்கத் தொடங்கிவிடும்.
எங்கெல்லாம் டை படக்கூடாது என நினைக்கின்றோமோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெயை சிறிது தடவிக்கொண்டு டை அடிக்க வேண்டும்.
டை அடிப்பது நாளடைவில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கொப்புளங்களையும் ஏற்படுத்தும். முடியை கருமையாகவோ கலராகவோ மாற்ற அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை தான் டையை தலையில் வைத்திருக்க வேண்டும்.