மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ காபியை இப்படி குடிங்க
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் நீண்ட நேரம் அமர்ந்தே இருந்து வேலை செய்வது, படிப்பது என்று உடல் உழைப்புகள் இல்லாததால் கொழுப்பு அங்கங்கே சேர்ந்து உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகின்றது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில் பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்படி முயற்சி செய்யும் போது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு நாளைக்கு 3 தொடக்கம் 4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், பஜ்ஜி போண்டா, பிஸ்கட் போன்ற துரித உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும்.
ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறையில் காபி குடிப்பதால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். அது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
காபி உடல் எடையை குறைக்குமா?
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இவ்வாறான காபியை காலை மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த காபியை காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அல்லது சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
தூங்கும் முன்னர் காபி குடிப்பது சிறந்த தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே தூங்க செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கு முன்னர் இதனை குடிப்பது உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரியும்.
மேலும் எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |