வீடு எப்போதும் தூசிபடியாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க
வீட்டில் அதிகப்படியான தூசிகள் சேர்வதை தடுப்பதற்கு ஸ்பைடர் செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்பைடர் பிளான்ட்
நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று அவசியமாகும். நமது நுரையீரலை நன்றாக இயக்க சுத்தமான காற்று முக்கியமாகும். நிறைய மரங்கள் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்று என்பது கிடைக்கும்.
நமது வீடு எப்போதும் தூசி மற்றும் மாசுக்களால் எப்போதும் பாதிக்கப்படும். வீட்டை எப்போதும் சுத்தம் செய்து கொண்டிருப்பது என்பது கடினமான விஷயமாகும்.
இதன் காரணமாகத்தான் வீட்டில் செடி வளர்ப்பார்கள். செடிகள் வளர்த்தால் அவை தூசுகளை உறிஞ்சி எடுத்து கொள்ளும் எனப்படுகின்றது.
ஆனால் எல்லா செடிகளிலும் ஸ்பைடர் செடி வீட்டில் வைத்தால் அது தூசி மாசுக்களை படிய விடாமல் உறிஞ்சி எடுக்கும். இது சுத்தமான காற்றை கொடுக்கக்கூடிய இன்டோர் பிளான்ட் எனப்படுகின்றன.
இந்த செடிகள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவை. இலைகள் மெல்லியதாகவும் அதில் பச்சை நிறங்களுக்கு இடையே வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும்.
இந்த செடிகள் கண்களை கவரக்கூடியது. இந்த செடிகளை வீடுகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். இந்த செடியை வளர்த்தால் வீடு எப்போதும் சுத்தமாக இருப்பதை நீங்கள் உணரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |