ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வேட்டையன் பட நடிகை... எகிறும் லைக்குகள்
நடிகை துஷாரா விஜயன் அழகிய சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
துஷாரா விஜயன்
2019 ஆம் ஆண்டு வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.
அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்யை பெற்றார்.
இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்ற நம்பிக்கையை இயக்குனர்களுக்கு கொடுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார். அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.
இந்த படத்தில் பலாத்கார காட்சியில் அவ்வளவு தைரியமாக இவரைத் தவிர மற்ற முன்னணி நடிகைகள் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதனால் ரசிகர்களின் பராட்டுக்களை வாரிக்குவித்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் சேலையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது துஷாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |