மூட்டுக்களை ஆரோக்கியமாக வைக்கும் முருங்கைக்காய்
பொதுவாக எல்லா காய்கறிகளிலேயும் ஏதோவொரு சத்து காணப்படுகின்றது. அந்த வகையில் முருங்கைக்காயில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகினன்றன.
கல்சியம், விட்டமின் A,இரும்புச் சத்து, விட்டமின் c,பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன.
சரி இனி முருங்கைக்காயில் உள்ள நன்மைகள் குறித்து பார்ப்போம்...
image - ultracare pro
ஆண்மை விருத்தி
விந்தணுக்களை பல மடங்காக அதிகரிப்பதோடு, ஆண் மலட்டுத் தன்மையையும் நீக்குகிறது. ஆண்மை விருத்தியடைகிறது.
எலும்புக்கு நல்லது
இதிலுள்ள பொஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை எலும்பு மற்றும் மூட்டுக்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
image - healthyfi me
வயிறுக்கு ஏற்றது
செரிமானத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அல்சர் அபாயத்தை குறைக்கிறது.
நீரிழிவுக்கு நல்லது
சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றி, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.