ஆடையில் பற்றி எரிந்த நெருப்பு! அரை நிர்வாணமாக ஓடிவந்த நபர்: பதபதைக்க வைத்த காட்சி
காட்டுத் தீயில் சிக்கிய தீயணைப்பு வீரர் தனது உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிக்கொண்டு, உடையில் தீப்பற்றியவாறு ஓடி வந்த காட்சி வைரலாகி வருகின்றது.
காட்டுத்தீயில் சிக்கிய வீரர்
ஸ்பெயின் நாட்டில் காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த காட்டுத்தீ ஏஞ்சல் மார்ட்டின் அர்ஜோனா என்னும் பகுதியிலிருந்து வடமேற்கு நகரமான தபராவை நோக்கி வேகமாகப் பரவி வந்தது.
அந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில தீயணைப்பு வீரர்கள் ஒரு வயல் பகுதியில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அதன் மூலம் காட்டுத்தீ சங்கிலி தொடரை முடிக்க முடியும் என தீவிரமாக செயல்ப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாகக் காற்று வீச, தீ அந்த பள்ளம் முழுவதும் பரவியது.

பதற வைக்கும் காட்சி
அதிலிருந்து தப்பிக்க பணியிலிருந்த வீரர்கள் ஒடிவந்தனர். அதில் ஒரு வீரர் மட்டும் தவிறி விழுந்ததில் அவரின் உடைகள் எல்லாம் கருகியுள்ளது. அரை நிர்வாணமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர் ஓடு வரும் காட்சி பார்ப்போரைப் பதறவைத்துள்ளது.
காட்டுத்தீயின் வீரியத்தை காட்டுகிறது. அதன் பின் அவர் மீட்கப்பட்டு ஹெலிக்காப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடுமையான தீக்காயங்களில் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
WARNING: GRAPHIC CONTENT - Angel Martin Arjona, a Spanish man who was trying to safeguard his town from a wildfire had a close brush with death when the blaze engulfed his excavator, forcing him to run for his life https://t.co/8WhaHK7nit pic.twitter.com/6GvvMIj5FE
— Reuters (@Reuters) July 18, 2022