சிறுநீரகத்தை சீரழிக்கும் பானங்கள் - இதை எல்லாம் குடிக்காதீங்க
அன்றாட வாழ்க்கையில் நம்மிர் பலர் சோடா, எனர்ஜி பானங்கள், விளையாட்டு பானங்கள், ஸ்மூத்திகள் போன்ற பானங்களை விரும்பி குடிப்பது வழக்கமாகவே இருக்கின்றது.
ஆனால் இந்த பானங்களை தினமும் குடிப்பதால் சிறுநீரகங்கள் மெது மெதுவாக சேதப்படுத்துகின்றன என்பதை பெரும்பாலோர் தெரியாலே குடித்து வருகின்றனர்.
சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டுவது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, தாதுக்களை சமநிலைப்படுத்துவது போன்ற முக்கிய பணிகளைச் செய்கின்றன.

ஆனால் இந்த பானங்கள் குடிப்பதால் சிறுநீரகம் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, நீண்டகாலத்தில் கடுமையான பாதிப்பை உருவாக்கக்கூடும் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பானங்களை குடிப்பதால் சிறுநீரகத்திற்கு எவ்வாறு எல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
குடிக்க கூடாத பானங்கள்
1. சோடா (கோலா பானங்கள்) டார்க் கோலா பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலம் கால்சியம் மற்றும் பாஸ்பேட் (phosphorus) சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் அதிக சர்க்கரைப் பொருள் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துவதால் சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்துகளாகிறது.

2. எனர்ஜி பானங்கள் மற்றும் அதிக காபி காஃபின், சர்க்கரை மற்றும் பல தூண்டுதல்களுடன் கூடிய எனர்ஜி பானங்கள் சிறுநீரகங்களின் ஒழுங்குமுறை செயல்பாட்டை முடக்கக்கூடும். அதிக காஃபின் நீரிழப்பை ஏற்படுத்தி, இரத்தத்தை தடிமனாக்கி, சிறுநீரகங்களுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. “அதிக காஃபின் மற்றும் சர்க்கரை சிறுநீரகங்களை நீரிழப்பு செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும்,”
3. விளையாட்டு பானங்கள் சாதாரண நாளாந்த நடவடிக்கைகளில் இவை தேவையில்லாத சுமையை சிறுநீரகங்களுக்கு ஏற்படுத்தின்றன. அதிக சர்க்கரை, செயற்கை இனிப்புகள் மற்றும் உணவு வண்ணங்கள் சேர்த்துள்ளதால், சிறுநீரகங்கள் இந்த பொருட்களை வடிகட்ட அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. நீண்ட உடற்பயிற்சி இல்லாமல் இவை அருந்தப்படும்போது, இரத்த அழுத்தமும் திரவ சமநிலையும் பாதிக்கப்படும்.

4. ஸ்மூத்திகள் ஆரோக்கியமானவை என்று நம்பப்படும் ஸ்மூத்திகளில் கீரை, கேல் போன்ற இலைகளும் சில பழங்களும் அதிக அளவு ஆக்சலேட்டுகளை கொண்டிருக்கின்றன. அதிக அளவில் இது சிறுநீரக கற்கள் உருவாக்க காரணமாகிறது. “ஒரு ஸ்மூத்தியில் அதிக அளவு கேல், கீரை சேர்க்கும் போது அறியாமலேயே ஆக்சலேட்கள் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன,” மேலும் ஸ்மூத்திகளின் அதிக இயற்கைச் சர்க்கரை சிறுநீரகங்களின் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க, இயற்கையான தண்ணீர், குறைந்த சர்க்கரையுள்ள பானங்கள் மற்றும் சீரான நீரேற்றத்தையே தேர்வு செய்வது நல்லது என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |