பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
பலரும் தெரிந்திராத விடயம் முளைவிட்ட மற்றும் நிறமாறிய உருளைக்கிழங்கை சாப்பிடலாமா இல்லையா என்பது தான். இதை பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
நிறம் மாறிய உருளை கிழங்கு
வீட்டில் பெரும்பாலும் அனைவரும் சாப்பிடும் ஒன்று உருளைக்கிழங்கு. வாங்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்றவை சில நேரங்களில் முளைவிட்டு இருக்கும்.
அந்த வகையில் முளைவிட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் நிறம் மாறிய உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைக்கலாமா? கூடாதா? என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சாப்பிடலாமா?
இந்த பச்சை நிற உருளைக்கிழங்குகள் என குறிப்பிடப்படும் உருளைக்கிழங்குகள் முழுவதும் பச்சையாக இருப்பதில்லை. நாம் உண்ணும் சாதாரண வகை உருளைக்கிழங்குகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாக இருக்கும்.
ஆனால் வீட்டில் வாங்கி வைத்த உருளைக்கிழங்கு முளைவிட்ட நிலையில் இருந்தாலும், உருளை தொட்டுப் பார்த்தால் மிகவும் உறுதியாக சுருக்கங்கள் ஏதுமில்லாமல் இருக்கும் இந்த உருளை கிழங்குகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் தொடுவதற்கு மிகவும் மிருதுவாகவும் சுருக்கங்களுடனும் காணப்பட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்த்தும் இல்லாமல் போயிருக்கும் இதுபோன்ற உருளை கிழங்ககளை உணவில் சேர்ப்பது பயனில்லை என கூறப்படுகின்றது.
அதிலும் உருளைக்கிழங்கில் சில இடங்களில் பச்சை நிறம் தெரிந்தால், அதனை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என கூறப்படுகின்றது. ஏனென்றால் பச்சை நிறம் இருப்பது அதில் நச்சுத்தன்மை இருப்பதை காட்டிகொடுக்கும் ஒரு அறிகுறியாகும்.
முளைத்த வெங்காயம் பூண்டு சமையலுக்கு பயன்படுத்தலாம் இவை உடலுக்கு பாதிப்பை தராது. ஏனென்றால் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |