காபி குடித்தும் உடல் எடையைக் குறைக்கலாம்... இந்த மாதிரி செய்து குடித்தால்
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். என்னதான் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும் காபி குடிக்கும் பழக்கத்தை மாத்திரம் விடுவதில்லை.
பொதுவாகவே காபியில் இருக்கும் பால் மற்றும் சக்கரையானது கலோரிகளை அதிகரிக்கும் இதனால் காபி குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று கேள்வி பட்டிருப்போம் ஆனால் இப்படி காபி குடித்தால் உடல் எடைக் குறையும். எப்படித் தெரியுமா?
காபியில் குறைக்கலாம் உடல் எடை
உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையைக் விரைவில் குறைக்க க்ரீம், சக்கரை போன்ற எதுவும் சேர்க்கப்படாத ப்ளாக் காபியைக் குடித்தால் உடல் எடைக்குறையும்.
காபி பிரியவர்கள் காபி குடித்துக் கொண்டு உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் காபியில் சக்கரை சேர்க்காமல் அதற்கு பதிலாக இயற்கை இனிப்பான்களை பயன்படுத்தலாம்.
காபியில் அதிக கலோரிகள் கொண்ட காபி க்ரீமர்கள் மற்றும் பிளேவர்கள் என்பன சேர்க்கப்படுகிறது இவை அதிக கலோரிகள் கொண்டதால் உடல் எடையை அதிகரிக்கும். அதனால் குறைந்த கொழுப்பு கொண்ட பாலை பயன்படுத்தலாம்.
காபியில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து குடித்தால் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு எடையும் குறையும்.
நீங்கள் அருந்தும் காபியில் சிறிய அளவில் MCT எண்ணெய் சேர்த்து குடித்தால் கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |