சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்
நாம் அனைவருக்கும் ஒரு பொதுவான பழக்கமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நம்மில் சிலர் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிப்பார்கள்.
இது நல்ல பழக்கம் இல்லை என்றும், கழிவறை சென்று வந்த பின்பு சிறிது இடைவெளி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன் காரணம் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
சிறுநீர் கழிப்பதற்கும் உடனடியாக தண்ணீர் குடிப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்தும் இதனால் வரும் பிரச்சனைகள் என்பதை இங்கு தற்போது பார்க்கலாம்.
சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடித்தல்
நமது அன்றாட பழக்க வழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக, சிறுநீரக நோய்களை அதிகரிக்கிறது.
இதனால் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. இப்படி குடிக்கும் போது நமது சிறுநீர் பை எதுவும் இல்லாமல் சுருங்கி இருக்கும். இதில் பிற பொருட்கள் ஏதாவது தங்கி இருக்கும் . இந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் அந்த பொருட்கள் நீரில் கரையாமல் பல பிரச்சனைகளை உருவாக்கும்.
இது நாளடைவில் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம். இதை பொருட்படுத்தாமல் செய்யும் போது சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று அதாவது (UTIs) அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே சிறுநீர் கழித்த 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது சிறுநீர் பாதை மற்றும் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் குடிப்பதால் நமது தசை பலவீனம் ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சுருங்கி பலவீனமடைவதே இதற்குக் காரணம். தண்ணீர் குடிப்பதால் உடனடியாக அந்த பாகங்கள் வலுவிழந்துவிடும்.
அதனால்தான் சிறுநீர் கழித்த பிறகு சிறிது நேரம் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக, உடலில் உள்ள pH அளவின் சமநிலை பாதிக்கப்படும். இது இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்த ஆபத்தைத் குறைக்க கழிப்பறைக்கு சென்ற பின் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட டம்ளர் தண்ணீரைக் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறைந்த நேரத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |