பேப்பர் கப்பில் டீ. காபி அருந்துகிறீர்களா? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க
காகிதக் கப்பில் தேநீர் பருகுவதால் நாம் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா? என்றால் அது கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.
ஆம் நமது உணவுப்பழக்கங்கள் மாறியுள்ளதுடன், நாம் எடுத்துக் கொள்ளும் பொருட்களில் பல உடல்நலக் கோளாறு ஏற்படுகின்றது.
அந்த வகையில் முன்பெல்லாம் டீ கடைகளில் கண்ணாடி டம்ளரில் தான் டீ கொடுப்பார்கள். ஆனால் தற்போது சுத்தம் பார்ப்பது காரணமாகவும், வேலைப்பாடு காரணமாகவும் பேப்பர் கப்பில் டீ பருகுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
காகிதக் கோப்பையில் டீ பருகுவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காகிதக் கோப்பை
காகிதக் கோப்பையில் தேநீர் மற்றும் காபி குடிப்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் காகிதக் கோப்பையில் தேநீர்/காபி குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.
காகிதக் கோப்பைகளை தயாரிக்க பல வகையான ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
நீங்கள் காகிதத்தை மட்டுமே பயன்படுத்தினால், அதில் பானங்களை வைத்திருப்பது கடினம் என்பது நமக்கே தெரியும்.
நீர்ப்புகாப்புக்காக அத்தகைய காகிதக் கோப்பைகளில் மைக்ரோபிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மைக்ரோபிளாஸ்டிக் கொண்ட கோப்பைகளில் இருந்து தேநீர் தொடர்ந்து குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சூடான தேநீர் மற்றும் காபியுடன் மைக்ரோபிளாஸ்டிக்களும் வெளியேற வாய்ப்புள்ளது.
மண் கலயங்களில் அளிக்கப்படும் தேநீர், பேப்பர் கப் போன்று பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |