அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா? அழகுக்கு ஆபத்தாம்
இன்று பலரும் விரும்பி அருந்தும் தேநீர் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பெரும்பாலான நபர்கள் தேநீருக்கு அடிமையாகி வருகின்றனர். காரணம் அவர்கள் பார்க்கும் வேலை. அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் என அனைவரும் தங்களது சோர்வை போக்கிக் கொள்ளும் பானமாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் தேநீரை அளவுக்கு அதிகமாக குடிப்பது உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும், குறிப்பாக சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேநீர் பருகினால் என்ன தீமை?
தேநீரை அதிகமாக பருகினால் தூங்கமின்மை உங்களுக்கு இருக்காது. ஆனால் எப்பொழுது சோர்வான முகத்தை பெறுவீர்கள்.
இதில் இருக்கும் காபின், உடலிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவை அதிகரிக்க பயன்படுத்தும் டையூரிடிக் மருந்தாக செயல்படுகின்றது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதுடன், தொல் வறண்டு சுருக்கங்களுடன் காணப்படும்.
ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதுடன், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சரும துளைகளை அடைத்து முகப்பருக்கள் ஏற்பட வழிவகுக்கின்றது.
உடலில் கொலாஜன் செயலிழப்பை உண்டாக்குவதுடன், இளம் வயதில் முதிர் தோற்றத்தை கொடுக்கின்றது.
சுறுசுறுப்பாக இருப்பதற்கு தேநீர் இரவில் பருகுவதால் தூக்கமின்மை ஏற்படுவதுடன், கண்களுக்கு கீழே கருவளையங்களையும் ஏற்படுத்துகின்றது.
இஞ்சி, ஏலக்காய் போன்ற நறுமணப்பொருட்கள் கலந்த டீ ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அரிப்பு ஏற்பட்டு தோல் அழற்சியும் ஏற்படும்.
சூடான தேநீரை பருகும் போது நாள்பட்ட தோல் நோயான ரோசாசியா பாதிப்பை ஏற்படுத்துவதால், மூக்கு, கன்னம் சிவப்பாக மாறும்.
அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வதால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஆதலால் நாள் ஒன்றிற்கு இரண்டுமுறை மட்டும் அருந்தினால் எந்தவொரு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |