அரங்கத்தில் கீழே விழுந்து அசிங்கப்பட்ட அறந்தாங்கி நிஷா... கழுவி ஊற்றிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவர்களின் உடன்பிறப்புகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவர்களின் உடன்பிறப்புகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரபலங்கள் தங்களது உடன்பிறப்புகளால் பல இடங்களில் அசிங்கப்பட்டுள்ளதை அரங்கத்தில் கூறி சிரிக்க வைத்துள்ளனர்.
தற்போது வெளியான ப்ரொமோவில் அறந்தாங்கி நிஷா தனது இருக்கையிலிருந்து கீழே விழுந்து அசிங்கப்பட்டுள்ளார். இதற்கு கோபிநாத் ஒரு ஷோவிற்கு சேரையே உடைச்சிடுவீங்க போலடா... என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |