இனி ABC ஜூஸ் தேவையில்ல... ஆயிரம் மடங்கு சத்து தரும் PBC ஜூஸை குடிங்க
நம்மில் பலருக்கும் ஏற்கனவே ஏபிசி ஜூஸ் (ABC Juice) ஆப்பிள், பீட்ரூட், கேரட் நன்கு தெரிந்ததாகும். ஆனால், அதைவிடச் சிறந்த நன்மைகளைத் தரக்கூடிய PBC ஜூஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? PBC ஜூஸ் என்பது மாதுளை (Pomegranate), பீட்ரூட் (Beetroot), சியா விதை (Chia seeds) ஆகிய மூன்றின் சேர்க்கையாகும். இந்த மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன.
PBC ஜூஸ் சத்துக்களும் நன்மைகளும்
மாதுளை (Pomegranate): பியூனிக்கலசின்கள் (Punicalagins) எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ரத்த ஓட்டத்திற்கும் உதவுகின்றன. வைட்டமின் C, இரும்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அனீமியாவை தடுக்கும்.
பீட்ரூட் (Beetroot): இதில் உள்ள நைட்ரேட், ரத்தக் குழாய்களை விரிவாக்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதயம் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜனை சீராக வழங்குகிறது.
சியா விதை (Chia Seeds): ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்தவை. இரட்டை ஸ்பூன் அளவில் சியா விதைகள் 4 கிராம் வரை புரதத்தையும், கூடுதலான சக்தியையும் தருகின்றன.
யாரெல்லாம் குடிக்கலாம்?
நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் இதை குடிக்கலாம். இந்த PBC ஜூஸ் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. எனவே, இரத்த சர்க்கரை உயர்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். எடைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதனை நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
இதய நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டில் உள்ள இயற்கை நைட்ரேட்கள், ரத்தக் குழாய்களை விரிவாக்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் இதயத்தை பாதுகாக்கும்.
சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் பொதுவாக ஆரோக்கியமான நபர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தினமும் சீராக இந்த ஜூஸை குடிக்கலாம்.
இதில் உள்ள சியா விதைகள் புரதத்தையும் நார்ச்சத்தையும் வழங்கி பசியைக் கட்டுப்படுத்துகின்றன.
கவனிக்க வேண்டியவை
PBC ஜூஸ் (மாதுளை, பீட்ரூட், சியா விதை) உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என்றாலும், சிலர் அதை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் உள்ளன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், குறிப்பாக சிறுநீரகக் கற்கள், செயலிழப்பு, அல்லது நைட்ரேட் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள், பீட்ரூட்டில் காணப்படும் அதிகமான நைட்ரேட் காரணமாக இந்த சாறை தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரியவர்கள்: தினமும் 200 முதல் 300 மில்லி வரை நீரிழிவு நோயாளிகள் மற்றும் சிறுவர்கள்: தினசரி 150 முதல் 200 மில்லி வரை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் பீட்ரூட் சாறு அல்லது PBC ஜூஸை எடுத்துக்கொள்ள வேண்டாம் என சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |