ABC ஜுஸ் தினமும் பருகினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
ABC ஜுஸை தினமும் அருந்துவதால் ஏற்படும் நன்மையினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ABC ஜுஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பானமாக இருக்கும் நிலையில், இதன் பயன்கள் பலருக்கும் தெரிவதில்லை.
அதாவது ABC ஜூஸ் என்பது ஆப்பிள் (Apple), பீட்ரூட் (Beetroot) மற்றும் கேரட் (Carrot) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும்.
image: Shutterstock
ABC ஜுஸின் நன்மைகள்
ஆப்பிள், பீட்ரூட், மற்றும் கேரட் ஆகியவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், கல்லீரலுக்கும் சிறந்ததாக இருக்கின்றது.
மேலும் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
image : arerofast.com
ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும்.
வைட்டமின் A மற்றும் C போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
ABC ஜுஸ் தயாரிப்பது எப்படி?
ஒரு ஆப்பிள், அரை பீட்ரூட், மற்றும் ஒரு பெரிய கேரட்டை எடுத்துக் கொள்ளவும்.
இவற்றினை நறுக்கி பிளெண்டரில் போடவும்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு அங்குல துண்டு இஞ்சி, மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து பருகினால் ABC ஜுஸ் தயார்.
image : tribest
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |