ஆட்டுக்கால் கிழங்கு சூப் ஒரு டம்ளர் குடிங்க.. மூட்டு வலி பறந்து போகும்
“உணவே மருந்து” என நமது முன்னோர்கள் கூறுவார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலனுக்காக பல மருத்துவ நலன்களை தரும் உணவுகளை தேடி தேடி சாப்பிட்டு வந்தார்கள். அதனால் தற்போது புதிதாக வரும் நோய்கள் அக்காலத்திலுள்ளவர்கள் இருப்பது குறைவாக இருந்தது.
ஆரோக்கியமாக 80 வயது வரை வாழ்ந்து அதன் பின்னர் தான் இறப்பார்கள். தற்போது இருக்கும் மோசமான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பிறந்த குழந்தைக்கு கூட நோய்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பெண்கள் அடிக்கடி அனுபவிக்கும் மூட்டு வலிக்கு கூட வீட்டில் மருந்து செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
ஆங்கில மருத்துவத்தை விட வீட்டில் செய்யக்கூடிய முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடிக்கலாம். இது மூட்டுவலிக்கு நிரந்த நிவாரணம் கொடுக்கும்.
அந்த வகையில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முடவாட்டுக்கால் கிழங்கு- 100 கிராம்
- இஞ்சி- 20 கிராம்
- பூண்டு- ஐந்து
- பச்சை மிளகாய்- 1
- கறிவேப்பிலை- கொஞ்சம்
- சீரகம்- முக்கால் ஸ்பூன்
- மிளகு- முக்கால் ஸ்பூன்
- பட்டை- சிறிய துண்டு
- கிராம்பு - இரண்டு
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- கரம் மசாலா- கால் ஸ்பூன்
- கொத்தமல்லி- கொஞ்சம்
- மிளகு தூள்- கால் ஸ்பூன்
- உப்பு- அரை ஸ்பூன்
ரசம் செய்முறை
முடவாட்டுக்கால் கிழங்கு எடுத்து கத்தியால் தோலை சீவி விட்டு தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போடவும்.
அதனுடன் இஞ்சி துண்டு, பல் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போல் முடவாட்டுக்கால் கிழங்கை அரைத்து கொள்ளவும்.
அடுத்து, குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். அதன் பின்னர் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும்.
இந்த கலவையில் உப்பு போட்டு, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை 10 நிமிடங்கள் மூடிப் போட்டு வேக வைக்கவும். விசில் அடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வடிக்கட்டவும்.
இறுதியாக மிளகு, கொத்தமல்லி தூவி கலந்துவிட்டு இறக்கினால் சுவையான, ஆரோக்கியமான முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |