life-ல இத மட்டும் செய்யாதீங்க.. சர்மிகா வாழ்க்கையை மாற்றிய 2 அட்வைஸ்
பொதுவாக சிறிவர்களாக இருக்கும் பொழுது நமது வீடுகளில் பல அறிவுரைகள் வழங்குவார்கள்.
அது அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும் சில சமயங்களில் அம்மா- அப்பாவை வீட்டிலுள்ள மற்ற உறவினர்கள் நமக்கு நெருக்கமாக இருப்பார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் யாருடைய அறிவுரையை கேட்பது என நாம் குழம்பி போய் விடுவோம். சிலர் தனக்கு யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பார்கள்.
இதுவொரு தவறான விடயமாக கூறப்படுகிறது. நம்மை சுற்றியுள்ளவர்கள் நமக்கு நல்லது நினைக்கிறார்களா? என்பதை குறிப்பிட்டதொரு சந்தர்ப்பம் வரும் பொழுது தான் தெரிந்து கொள்ள முடியும்.
உறவினர்களின் சிலர் நமக்கு நன்மை நினைப்பது போன்று தான் தெரியும், ஆனால் அவர்கள் அவர்களுக்கு சார்பாக தான் நடந்து கொள்வார்கள்.

அந்த வகையில், சிறு வயதில் இருக்கும் பொழுது மருத்துவர் சர்மிகாவுக்கு அவருடைய அம்மா கொடுத்த அட்வைஸ் பற்றி பதிவொன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அது பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.
1. அண்ணன்- தங்கை உறவு
நாம் கல்லூரி நாட்களாக இருந்தாலும், வேலைச் செய்யும் நாட்களிலும் நமக்கு நெருக்கமான சிலரை அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என அழைப்போம். ஆனால் அது தவறு, இவர்கள் நமது ரத்த உறவில் வந்தவர்களாக இருக்கமாட்டார்கள். எப்போதாவது நேரம் வரும் பொழுது அவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.
மேலும் அவர்கள் சகோதர்கள் உறவில் இருப்பார்கள் என நிச்சயமாக கூற முடியாது, சில சமயங்களில் அவர்கள் நமது வாழ்க்கையை மாற்றும் நபராகவும் இருப்பார்கள். அதனால் முடிந்தளவு நமது ரத்த சொந்தங்கள் தவிர்த்து மற்றவர்களை சொந்தம் கொண்டாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. உறவினர்களுக்கு முக்கியத்துவம்
நமது சமூகங்களில் அம்மா- அப்பாவை விட சிலர் சொந்தங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். அம்மா- அப்பா பெற்று வளர்த்திருப்பார்கள், ஆனாலும் இவர்கள் பெரியம்மா, சித்திமார்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படி இருப்பது தவறு. ஏனெனின் என்ன உறவாக இருந்தாலும் அவர்கள் நமது வாழ்க்கையில் நிரந்தரமாக இருப்பார்களா? என்பதை பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் பொழுது உங்களுக்கே யார் வேண்டும் என ஒரு தெளிவு கிடைக்கும். இந்த இரண்டு அறிவுரைகளும் மருத்துவர் சர்மிகாவின் வாழ்க்கையை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாக அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |