செத்து செத்து மடியும் திமிங்கிலங்கள்.... அழிவின் அறிகுறியா? மர்மத்தின் பிண்ணனி என்ன?
நியுசிலாந்து கடற்கரையில் கரையொதுங்கிய 31 பைலட் திமிங்கிலங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் திமிங்கிலங்கள் இறக்கும் மோசமான இடம் என்று அறியப்படும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
தெற்கு தீவின் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்கரையில் திமிங்கிலங்களை உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர்.
இதில் மீட்பாளர்களால் 5 திமிங்கிலங்கள் மாத்திரமே காப்பாற்றப்பட்டு கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமிங்கிலங்கள் கரையொதுங்கி இறக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருவது ஆபத்தின் அறிகுறியாக காணப்படுவதுடன், மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திமிங்கிலம் கரை ஒதுங்குவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும், இவ்வாறு திமிங்கிலங்கள் உயிரிழந்து கரையொதுங்குவதற்கான காரணம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளதாக கூறப்படுகின்றது.
15 ஆண்டுகள் தொடரும் மர்மம்
கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த மோசமான சம்பவத்தில் சுமார் 700 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதாவும் இதில் சுமார் 250 இறந்து விட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றது.
மேலும், இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகள் திமிங்கிலங்கள் கரையொதுங்கிய 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை ஓர் அதிர்ச்சி தகவலே.
மறைக்கப்பட்ட மர்மங்கள்....உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர்!