பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆன்டி பயாடிக் Doxycycline
Doxycycline மாத்திரைகள் முகப்பரு உட்பட பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆன்டி பயாடிக் ஆகும்.
பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அத்தியாவசிய புரதங்களின் தொகுப்பைத் தடுப்பதன் மூலம் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது.
பக்கவிளைவுகள்
- வாந்தி
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- தோல் அழற்சி
- மூச்சுவிடுவதில் சிரமம்
- பற்களில் நிறமாற்றம்
- பசியின்மை
பாக்டீரியா தொற்றுகளின் தீவிர நிலைகளில் மட்டுமே மருத்துவர்கள் Doxycyclineயை பரிந்துரைக்கலாம்.
வயிறு தொடர்பான பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க உணவுடன் அல்லது நீர் ஆகாரத்துடன் இதனை எடுத்துக்கொள்ளவும்.
மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுமையும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளவும், Doxycycline மாத்திரைகள் எடுத்துக்கொண்டு அரைமணிநேரம் வரை உறங்க செல்ல வேண்டாம்.
தொண்டை எரிச்சல் ஏற்படாமல் இருக்க உட்கார்ந்த அல்லது நின்ற நிலையில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
வயிற்றுப்போக்கும் இதன் பக்கவிளைவுகள், மருந்துகளை முடிவடையும் போது வயிற்றுப்போக்கு நின்றுவிடும், ஒருவேளை தொடர்ந்தாலோ அல்லது ரத்தத்துடன் கூடிய மலம் வந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பிணிகள், தாய்பாலூட்டும் பெண்கள் மற்றும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
Doxycycline மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போது பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாத்திரைகள் உட்கொண்டு இரண்டு மணிநேரம் கழித்து உணவுகளை சாப்பிடலாம்.
தீவிரமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும், இது பொதுவான பக்கவிளைவு தான் என்றாலும் தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு Doxycycline பயன்படுத்தக்கூடாது.
குறிப்பு- மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானதே