முட்டை சாப்பிட்டதும் தப்பி தவறி கூட இதையெல்லாம் சாப்பிடாதீங்க! உயிருக்கே ஆபத்தாகும்
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிலர் அளவு கடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனைத் தவிர அசைவ உணவுகளிலும் அதிக சத்துக்கள் உள்ளது.
ஆனால் அசைவ உணவுகளை விரும்பாத சிலர் முட்டை சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு முட்டை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிட்டால் அது மிகவும் ஆபத்து.
வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டபிறகு சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முட்டையில் அதிக புரதம் நிறைந்துள்ளது. அது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
அதுமட்டுமன்றி அதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அது எலும்புகளை வலிமையாக்கும். அதனால் ஜிம் போகும் பழக்கமுள்ளவர்கள் வேகவைத்த முட்டைகளை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
ஏனென்றால் முட்டை சாப்பிட்ட பிறகு உடலுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான சக்தி கிடைக்கும். ஆனால் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
அதன்படி வேக வைத்த முட்டையை சாப்பிட்ட பிறகு சில எலுமிச்சை சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. இதை செய்வதன் மூலம் நமது ரத்த நாளங்கள் அதிகம் பாதிக்கப்படும்.
அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும். வேக வைத்த முட்டையை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. அதனால் மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும் முட்டை சாப்பிட்ட உடனே பன்னீர் உட்கொள்ளக் கூடாது. இது இரண்டிலும் புரதம் அதிகமாக இருப்பதால், ஜீரணிப்பது மிகவும் கடினம்.
வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு ஒரு போதும் மீன் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீன் சாப்பிட்டால், தோல் தொடர்பான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
எனவே முட்டை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை எல்லாம் தவிர்ப்பது மிகவும் நல்லது.