வார இறுதி நாட்களில் அதிகமாக தூங்கினால் உடலில் இத்தனை பிரச்சனைகளா?
தற்போது இருக்கும் வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கிறது. இந்த காரணத்தினால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணிநேர உறக்கைத்தை மட்டுமே பெறுகின்றான்.
வார நாட்களில் வேலை மற்றும் தங்களின் விருப்பத்ற்கேற்ற இணையப்பயன்பாடு இந்த தூக்கமின்மைக்கு முழுமையான காரணமாக உள்ளது. இப்படி தூங்காமல் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளமல் விடுவதற்கு காரணம் வார இறுதியில் தூங்கலாம் என்பது தான்.
ஆனால் இது தவறானதாகும். இந்த நோய்க்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர். ஆய்வின்படி ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என கூறப்படுகின்றது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும்.
இதை தொடர்ந்து ஒருவர் வாரநாட்களில் ஐந்து மணிநேரம் தூங்கிவிட்டு வார இறுதி நாட்களில் ஐந்து மணி நேரத்தை விட அதிகமாக தூங்கினால் உடலில் பல பிரச்சனைகள் வரும் என மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர். இதனால் வரக்கூடிய பிரச்சனைனை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வார இறுதி நாள் தூக்கத்தின் பிரச்சனைகள்
‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’
நாம் தூக்கத்தில் இருக்கும் போது மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு உட்படுகிறது. இதன்போது அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. இதனால் தான் குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் எனப்படுகின்றது.
இதனால் நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இது தவிர ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு
இந்த குறைவான தூக்கத்தால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா எனும் (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைவான தூக்கம் அதாவது ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது, உகந்த தூக்கம் ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு மற்றும் அதிக தூக்கம் ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது. இதனால் இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் மூலம் வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |