யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத இலை
யூரிக் அமிலம் அதிகரிப்பு மனிதர்களுக்கு பல பிரச்சினைகளை கொடுக்கிறது.
யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவு பொருளாகும்.
இந்த பொருள் அதிகரிப்பை “ஹைப்பர்யூரிசிமியா” (Hyperuricemia) என அழைப்பார்கள்.
அதில் ஒன்றான பிளாஸ்மா (Plasma) யூரிக் அமிலம் அதிகரிப்பு கீல்வாதம், சிறுநீரக கற்கள் உள்ளிட்டவை போன்ற மோசமான நோய் நிலைமைகளை ஏற்படுத்தும்.
உடலில் இருக்கும் யூரிக் அமிலம் நீண்ட காலமாக குவிந்திருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இதனை ஆங்கில மருத்துவத்தால் குணமாக்கலாம். அதிலும் பார்க்க வீட்டு வைத்தியம் முறையில் எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம்.
அந்த வகையில் மனிதர்களுக்கு வரும் நாள்ப்பட்ட நோய்களை குணமாக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உள்ளது.
இது வீடுகளில் எளிமையாக கிடைக்கும். வெற்றிலையில் இருக்கும் சாற்றில் அப்படி என்ன தான் இருக்கிறது? அதற்கு யூரிக் அமிலக்கட்டுபாட்டிற்கும் என்ன தொடர்பு? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும் வெற்றிலை
யூரிக் அமிலம் உடலில் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை குறைக்கும் வேலையை வெற்றிலை செய்கிறது. இது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் பண்புகள் வெற்றிலையில் உள்ளதால் மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலியை குறைக்கிறது.
எப்படி சாப்பிடுவது?
யூரிக் அமிலம் அதிகரிப்பு பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு வெற்றிலை எடுத்து வெறும் வாயில் மென்று சாப்பிட வேண்டும். இதனால் யூரிக் அமிலம் கட்டுக்குள் வரும். புகையிலையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
யூரிக் அமிலம் அறிகுறிகள்
1. மூட்டு வலி, விறைப்பு, வீக்கம்
2. நடக்க சிரமம்
3. மூட்டுகளை மறுவடிவமைத்தல்
4. சிறுநீரக கல்
5. கீழ் முதுகு, பக்க, வயிற்று வலி
6. குமட்டல் வாந்தி
7. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
8. துர்நாற்றம் வீசும் சிறுநீர், அல்லது சிறுநீரகத்தில் ஏற்படும் வலி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |