காலை எழுந்து எவ்வளவு நேரத்திற்கு பின் காபி குடிக்கணும்? Bed Coffee இனி குடிக்காதீங்க
பொதுவாக காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் சரியான முறை கையாளாமல் போகும் பட்சத்தில் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
காபியை எப்போது, எப்படி குடிக்க வேண்டும்? எவ்வளவு குடிக்க வேண்டும்? எவ்வளவு நேரத்திற்கு பின் குடிக்க வேண்டும்? என்பதனை காபி பிரியர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நாள்பட்ட நோய்களை தடுக்கும் வேலைகளை கூட காபி செய்கிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை காபியை விரும்பி குடிக்கிறார்கள்.
உதாரணமாக, 2 முதல் 5 கப் காபி குடித்து வந்தால் ஆரம்பகால மரணம், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரல், எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள், பார்கின்சன் நோய் மற்றும் மனச்சோர்வை உள்ளிட்ட நோய்களின் ஆபயத்தை குறைக்கும்.
அதே சமயம், 5 கப்களுக்கு மேல் காபி குடித்தால் கவலை, மனச்சோர்வு, அமைதியின்மை, குமட்டல் மற்றும் பிற பக்க விளைவுகள் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் காபி பற்றி வேறு என்னென்ன விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காபி குடிக்கும் போது விடும் தவறுகள்
1. அளவு அதிகமாக காபி குடிப்பதால் தூக்கமின்மை, இதய துடிப்பு அதிகரிப்பு, பதட்டம், செரிமான பிரச்சனைகள் மற்றும் இதய படபடப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
2. காபியில் அதிக சர்க்கரை சேர்த்து சிலர் குடிப்பார்கள். இப்படி குடிக்கும் போது ஆரோக்கியமானதாக இருக்கும் காபி பானம் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
3. காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் காபி குடிக்காமல் 1 மணி நேரம் கழித்து காபி குடிப்பது ஆரோக்கியமானதாகும். இதனை தவறும் பட்சத்தில் வயிற்றில் உள்ள அமிலம் அதிகரித்து, செரிமான கோளாறுகள், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். அத்துடன் காபி குடிப்பதற்கு முன்னர் சிற்றூண்டி அல்லது காலை உணவு ஏதாவது சாப்பிட வேண்டும்.
4. காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என நினைத்து காபி குடிப்போம். காபி குடிப்பதற்கு முன்னர் போதிய தூக்கம், சரியான ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட தவறுகள் செய்து விட்டால் காபியால் கிடைக்கும் பலன்கள் குறைவாக இருக்கும்.
5. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4 கப் வரை குறைக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான நுகர்வு நன்மைகளை விட அதிக தீமைகளை ஏற்படுத்தலாம் என்பதை பிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |